தமிழ்நாடு

நடிகர் விஜய்யிடம் விவாகரத்து கோரிய மனைவி சங்கீதா! : காரணத்தைக் கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி!

விஜய்யின் மனைவி சங்கீதாவின் மூலம் விஜய்யின் மற்றொரு பிம்பம் வெளியாகியிருக்கிறது.

நடிகர் விஜய்யிடம் விவாகரத்து கோரிய மனைவி சங்கீதா! : காரணத்தைக் கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

திரைப்படங்களில் இடம்பெறும் நல்ல கதைகள் மூலம் மக்களிடையே வரவேற்பை பெறத் தொடங்கும் கதை நாயகர்கள் காலப்போக்கில், திரைக்கு அப்பாற்பட்டும் தங்களை நாயகர்களாகவே தகவமைத்துக்கொள்ள தொடங்கி விடுகின்றனர்.

உண்மையான வாழ்வியலுக்கும், மனித உறவுகளுக்கும் துளியும் தொடர்பில்லாத வகையில், சினிமா வசனங்களை மட்டுமே வைத்து மக்களின் ஆதரவைப் பெற திட்டம் தீட்டுகின்றனர்.

பொழுதுபோக்கோடு நின்றுவிட்டால் கூட, அந்த நாயகர்தோற்றம் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்திவிடாது.

ஆனால், பொழுதுபோக்கால் பெற்ற புகழை வைத்துக் கொண்டு, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை தீர்மானிக்கும் அரசியலிலும் நாயகர் வேடமிட திட்டமிடுவதே ஆபத்துக்குரியதாய் அமைந்துவிடுகிறது.

அப்படியான, ஆபத்துக்குரியவராகதான் அரசியலில் புது வரவாக விளங்கும் நடிகர் விஜய்யும் இருக்கிறார்.

நடிகர் விஜய்யிடம் விவாகரத்து கோரிய மனைவி சங்கீதா! : காரணத்தைக் கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி!
  • நாட்டில் உழைக்கும் மக்களுக்கான அடிப்படைத் தேவை என்ன?

  • கல்வி, பொருளாதாரம், சமூகநீதி, சுயமரியாதை என மக்களின் தன்னுரிமைகள் சார்ந்த விடுதலையை அடைய, மாந்தனுக்கு இருந்த தடைகள் என்னென்ன?

  • அதனை வென்றெடுத்த கொள்கைகளும், கோட்பாடுகளும் என்னென்ன?

  • அக்கொள்கைகளையும், கோட்பாடுகளையும் தற்போதைய அரசியலாளர்கள் எந்த வகையில் ஏற்று அதனை பின்பற்றி, ஆட்சி செய்கிறார்கள்?

  • இவை தவிர்த்து, பாசிச ஆட்சியாளர்களால், உண்டாகும் தாக்கங்களும், அதற்கு எதிராக எழும் உரிமைப் போராட்டகளும், எந்த நிலையில் தொடர்ந்து கொண்டிருக்கின்றன?

  • ஆட்சியாளர்கள் ஒருபுறம் இருக்க, சொத்துகளை குவித்து வைத்திருக்கும் முதலாளிகள் முன்னெடுக்கும் வஞ்சிப்பு நடவடிக்கைகள் எப்படியாக இருக்கிறது.

நடிகர் விஜய்யிடம் விவாகரத்து கோரிய மனைவி சங்கீதா! : காரணத்தைக் கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி!

என்பது பற்றியெல்லாம் துளியும் தெளிவான பார்வை இல்லாமல், ஒரு தலைவன் உருவானால், அவன் பின்னே திரளும் கூட்டம் எவ்வாறு மக்களை வழிநடத்தி செல்லும் என்பதற்கான விடையாகதான், விஜய்யும், அவர் தொடங்கிய த.வெ.க.வும் அமைந்துள்ளது.

இதனை சரி செய்துகொள்ள சமூகநீதி கொள்கையாளர்களும், சமூக பார்வைக் கொண்ட பொதுமக்களும் பல்வேறு கருத்துகளை வெளிப்படுத்தும் வேளையிலும், அதனை புறக்கணிக்க மட்டுமே புதுவரவு விஜய்க்கும், அவரது கூட்டாளிகளுக்கும் மனமிருக்கிறதே தவிர, தவறை திருத்திக் கொள்ள எவ்வித ஈடுபாடும் இல்லை.

இதுபோன்ற சூழலில்தான், விஜய்யின் மற்றொரு பிம்பமும் வெளியாகியிருக்கிறது.

செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் 26 ஆண்டு திருமண வாழ்வை ரத்து செய்ய கோரி விஜய்யின் மனைவி சங்கீதா தாக்கல் செய்துள்ள மனுதான், அந்த பிம்பத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

நடிகர் விஜய்யிடம் விவாகரத்து கோரிய மனைவி சங்கீதா! : காரணத்தைக் கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி!
NAUDIYAL

அந்த மனுவில், “1999 ஆகஸ்ட் 25ஆம் நாள் மனுதாரருக்கும் (விஜய் மனைவி சங்கீதா) நடிகர் விஜய்க்கும் திருமணம் நடைபெற்றது. பல்வேறு விருப்பு, வெறுப்புகளுக்கு இடையிலும் அத்திருமண வாழ்க்கை சுமூகமாக நகர்ந்தது.

அப்படியான சூழலில், 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், நடிகர் விஜய் (மனுதாரரின் கணவர்), ஒரு நடிகையுடன் திருமணத்திற்கு மீரிய ஒரு உறவில் ஈடுபட்டிருப்பது மனுதாரருக்கு தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, இதனை மனுதாரர் கண்டித்த நிலையில், அதனை முதலில் சரிசெய்து கொள்வதாக தெரிவித்த நடிகர் விஜய், பிறகு மனுதாரரை (சங்கீதாவை) புறக்கணித்து, அவரை தனிமைப்படுத்தியுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த நடிகையுடன் வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டு, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதாகவும், அவற்றின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதாகவும் மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்க்கும், மனுதாரருக்கும் இரு குழந்தைகள் இருப்பதால், அவர்களின் நலன் கருதியும், பொதுநலன் கருதியும் அந்த நடிகையின் பெயரை வெளியிடவில்லை என்றும், தேவைப்பட்டால் வெளியிடப்படும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்யிடம் விவாகரத்து கோரிய மனைவி சங்கீதா! : காரணத்தைக் கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி!

இந்த செய்தி வெளியாகி, ஒட்டுமொத்த விஜய் ரசிகர்கள் இடையிலும் பெரும் அதிர்ச்சியை உண்டாகியுள்ளது. இப்படியான சூழலிலும், பலதரப்பட்டவர்கள் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து, விஜய்க்கு முட்டுக்கொடுத்து வருகிற நிலை, மனிதத்துவத்தையே கேள்வியெழுப்பும் வகையில் அமைந்துள்ளது.

ஒருவர் கூட்டத்தைக் கூட்டி அதில் ஏற்படும் விபத்திற்கு, மற்றொருவர் மேல் முதலில் பழி போடுகிறார். அதாவது, “என்னை வேண்டுமானால் பழி வாங்குங்கள், ரசிகர்களை பழிவாங்காதீர்கள்” என்கிறார்.

அவரே சில மாதங்கள் கழித்து, “என் மீது ஏன் பழி சுமத்துகிறீர்கள்?” என்று கேட்கிறார். அதாவது பழி சுமத்தியவரே, என் மீது ஏன் பழி சுமத்தினீர்கள்? என்கிறார்.

இப்படி பல நிலைகளில், அவர் தனது இரட்டிப்பு மனநிலையை வெளிப்படுத்துகிறார். அவர் பெரும் ரசிகர் கூட்டம் கொண்ட நடிகர் விஜயாக இருக்கிறார் எனும்போது, இதனைக் கண்டிக்க வேண்டிய அவரது ரசிகர்கள், அவர் மீது எவ்வித கேள்வியும் எழுப்பாமல் இருப்பது, அறியாமையின் உச்சமாகவே அமைந்துள்ளது.

தலைவன் என்பவர் கூட்டத்தைக் கூட்டுபவன் அல்ல. கூட்டத்திற்காக குரல் கொடுப்பவன். ஆனால், இங்கு கூட்டத்தை கூட்டுபவனுக்காக குரல் கொடுக்க கூட்டம் உள்ளதே தவிர, கூட்டத்திற்காக குரல் கொடுக்கும் தலைமை வெற்றிடமாகவே நீடிக்கிறது.

ஆகவே, இனியும், சினிமா மாயையில் தேங்கியிருக்காமல், ரசிகர் பட்டாளம் விழித்துக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகவும் அமைந்திருக்கிறது.

banner

Related Stories

Related Stories