தமிழ்நாடு

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அவருடைய இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தார்.

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார். இந்த சந்திப்பின் போது திமுக பொதுச் செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா உள்ளிட்டோர் உடனிருந்தனர். அவர்களை, எல்.கே.சுதீஷ் வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார்.

இந்த சந்திப்பின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்திற்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து விஜயகாந்த் அவர்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தார்.

மேலும், கொரோனா நிவாரண நிதியாக ரூ.10 லட்சத்தை தன் கையால் முதலமைச்சரிடம் விஜயகாந்த் வழங்கினார். இந்த சந்திப்பின்போது தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், விஜயபிரபாகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

banner

Related Stories

Related Stories