India
பாஜக எம்.பி வீட்டில் சடலமாக கிடந்த சிறுவன்.. வெளியான அதிர்ச்சி பின்னணி.. நடந்தது என்ன ?
அஸ்ஸாம் மாநிலத்தின் சில்சார் தொகுதி பா.ஜ.க எம்.பியாக இருப்பவர் ராஜ்தீப் ராய். இவரின் வீட்டில் வேலைகாரக் பெண் தனது குழந்தைகளோடு தங்கியிருந்துள்ளார். இவரின் குழந்தைகளில் மூத்த பெண் குழந்தை 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
அதேபோல மற்றொரு ஆண் 5-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர்கள் எம்.பி ராஜ்தீப் ராயின் வீட்டில்தான் சாப்பிடுவது வழக்கமாக இருந்துள்ளது. இந்த சூழலில் வழக்கம்போல நேற்று இரவு வேலைக்கார பெண் தனது குடும்பத்தோடு இரவு உணவு அருந்தியுள்ளார்.
அதன்பின்னர் தூங்கசெல்லும்முன்னர் அவரின் மகன் செல்போனை கேட்டுள்ளார். ஆனால், அதற்கு மறுத்த அவரின் தாய் மகனை தூங்கச்சொல்லிவிட்டு வேலை செய்ய சென்றுள்ளார். பின்னர் வேலை முடிந்ததும் தனது மகனை பார்க்க வந்தபோது அந்த கதவு உள்பக்கமாக அடைக்கப்பட்டிருந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் அங்கிருந்தவரை அழைத்து கதவை உடைத்து பார்த்தபோது சிறுவன் தூக்கிட்டு சடலமாக தொங்கிக்கொண்டிருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர்.
மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக எம்.பி நான் கட்சி அலுவலகத்தில் இருக்கும்போது சிறுவன் தூக்கிட்டுக் கொண்டது குறித்து தகவலளிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுவனின் தாய் எங்கள் வீட்டில் இரண்டாண்டுகளுக்கு மேலாக வேலை செய்துவருகிறார். இது குறித்து காவல்துறை சட்டப்படி விரிவான விசாரணை நடத்த வேண்டும்"என்று கூறியுள்ளார்.
Also Read
-
“2026 வெற்றிக்கு அடித்தளமாக ‘இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!
-
திராவிட மாடலில் ‘மிளிரும் மகளிர்!’ : மகளிருக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களின் பட்டியல் உள்ளே!
-
2-ம் கட்ட கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விரிவாக்கம்.. விடுபட்ட மகளிர் வங்கிகளில் ரூ.1000 வரவு!
-
பத்துத் தோல்வி பழனிசாமியின் பழைய ஊழல்கள் – 1 : பட்டியலிட்டு அம்பலப்படுத்திய முரசொலி!
-
மெட்ரோ விவகாரம் : பதிலே இல்லாமல் பதில் அளித்துள்ள ஒன்றிய அமைச்சர்.. - சு.வெ எம்.பி. விமர்சனம்!