இந்தியா

"நடந்த சம்பவத்துக்காக நான் வெட்கப்படவில்லை"- இஸ்லாமிய மாணவரை தாக்க கூறிய ஆசிரியர் சர்ச்சை கருத்து !

உத்தரபிரதேசத்தில் இஸ்லாமிய மாணவரை தாக்க கூறிய சம்பவத்துக்காக நான் வெட்கப்படவில்லை என மாணவரை தாக்கக்கூறிய ஆசிரியை த்ரிப்தா தியாகி கூறியுள்ளார்.

"நடந்த சம்பவத்துக்காக நான் வெட்கப்படவில்லை"- இஸ்லாமிய மாணவரை தாக்க கூறிய ஆசிரியர் சர்ச்சை கருத்து !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சி நடைபெறுகிறது. முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் உள்ளார். இம்மாநிலத்தில் தொடர்ச்சியாக இஸ்லாமிய மக்கள் மீதான தாக்குதல் மற்றும் வெறுப்பு பேச்சு அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்களிடையேயும் பிரிவினை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இத்தகைய உத்தரபிரதேசத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னர் பள்ளி ஒன்றில் ஆசிரியரே இந்து மாணவர்களிடம் இஸ்லாமிய மாணவனை தாக்கச் சொல்லும் வீடியோ ஒன்று வெளியாகி நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது குறித்து வெளியான வீடியோவில், இஸ்லாமிய மாணவர் ஒருவர் நிற்கிறார். அந்த மாணவரை அடிக்குமாறு ஆசிரியர் திருப்தா தியாகி என்பவர் கூறியவுடன் முதலில் ஒருவர் அந்த மாணவரை அடிக்கிறார். அதன்பின்னர் அடுத்தடுத்து பிற மாணவர்கள் அடிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

இந்த அதிர்ச்சி சம்பவம் முசாபர் நகரில் செயல்பட்டுவரும் பள்ளி ஒன்றில் நடந்துள்ளது. மாணவர்கள் மத்தியில் வெறுப்பைப் பரப்பும் இச்சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து அந்த ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

"நடந்த சம்பவத்துக்காக நான் வெட்கப்படவில்லை"- இஸ்லாமிய மாணவரை தாக்க கூறிய ஆசிரியர் சர்ச்சை கருத்து !

இது குறித்து மாவட்ட நீதிபதியிடம் பேசிய அந்த மாணவரின் தந்தை, சுமார் இரண்டு மணிநேரம் தன் மகன் சித்ரவதைக்குள்ளானதாகத் தெரிவித்திருக்கிறார். மேலும், வேலைக்காக பள்ளிக்குச் சென்றிருந்த எங்களின் மருமகன்தான், என் மகன் அடிபடுவதை வீடியோ எடுத்தார் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், நடந்த இந்த சம்பவத்துக்காக நான் வெட்கப்படவில்லை என மாணவரை தாக்கக்கூறிய அந்த ஆசிரியை த்ரிப்தா தியாகி கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்துப்பேசிய அவர், " நான் மாற்றுத்திறனாளி, அந்த மாணவனிடம் கண்டிப்பாக இருக்குமாரு அவரின் பெற்றோரிடமிருந்து அழுத்தம் வந்ததால் மாணவர்களை அடிக்கூறினேன். இந்த தவறை நான் ஏற்கிறேன். அந்த மாணவனை மதரீதியில் துன்புறுத்துவது எனது நோக்கமல்ல. ஆனால் இதற்காக நான் வெட்கப்படவில்லை"என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories