India
காதலுக்கு எதிர்ப்பு.. காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்று உப்புபோட்டு புதைத்த மனைவி.. வங்கத்தில் அதிர்ச்சி !
மேற்கு வங்க மாநிலம், புருலியா மாவட்டதை சேர்ந்தவர் உத்தரா. இவருக்கும் ஜூதன் என்பவருக்கும் இடையே பல ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்திக்கு ஆண் மகன் ஒருவரும் இருந்துள்ளார். ஆனால் சில மாதங்களுக்கு முன்னர் உத்தராவுக்கு மகதோ என்பவரோடு தொடர்பு ஏற்பட்டுள்ளது.
பலமுறை இருவரும் நெருக்கமாக இருந்த நிலையில், சேர்ந்து வாழவும் முடிவு செய்துள்ளனர். ஆனால், இவர்கள் இந்த நெருக்கம் உத்தராவின் கணவர் ஜூதனுக்கு தெரியவந்த நிலையில், அவர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் தங்கள் உறவுக்கு எதிராக இருக்கும் கணவரை கொல்ல உத்தராவும் மகதோவும் முடிவு செய்துள்ளனர்.
அதன்படி ஜூதனை தனியான இடத்துக்கு உத்தரா அழைத்துச்சென்ற நிலையில், அங்கு ஒளிந்திருந்த மகதோ தான் வைத்திருந்த ஆயுதத்தால் ஜூதனை கொலை செய்துள்ளார். இந்த விவகாரம் வெயியே தெரியாமல் இருக்க வீட்டின் கழிவறையில் ஜூதனின் உடலை உப்புப்போட்டு புதைத்துள்ளனர்.
தனது தந்தை காணாமல் போன நிலையில், ஜூதன் அவரை பல இடங்களில் தேடியுள்ளார். ஆனால் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்காத நிலையில், காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி போலிஸார் விசாரணை நடத்தின்போது ஜூதனின் மனைவிக்கு மற்றொரு நபருடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
அதன்பின்னர் உத்தராவிடம் விசாரணை நடத்தியபோது காதலரோடு சேர்ந்து கணவரை கொலைசெய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். பின்னர் அவர் கூறிய தகவலின் அடிப்படையில் ஜார்க்கண்டில் தலைமறைவாக இருந்த மகதோவை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“அயலகத்தில் பயிலும் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிய தவெக அரசு!” : கனிமொழி எம்.பி கண்டனம்!
-
“அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்ட நிதி.. மலேசியாவில் தவிக்கும் மாணவர்கள்” : அன்பில் மகேஸ் கண்டனம்!
-
தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் : அரசின் நடவடிக்கை என்ன? - பேரவையில் மனோஜ் பாண்டியன் கேள்வி!
-
டெண்டரில் முறைகேடு.. முதலமைச்சர் அலுவலகத்திலேயே நடந்த ஊழல்? - பகீர் கிளப்பும் செய்தியின் பின்னணி என்ன?
-
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மீது 2 வழக்குகள் : உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்!