சினிமா

“உன் போட்டோவை மார்பிங் செய்து வெளியிட்டுவிடுவேன்..” - இணை தயாரிப்பாளர் மீது பிரபல நடிகை பாலியல் புகார் !

தனக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றால், எனது போட்டோவை மார்பிங் செய்து ஆபாச தளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டல் விடுத்ததாக பிரபல நடிகை இணை தயாரிப்பாளர் மீது பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளார்.

“உன் போட்டோவை மார்பிங் செய்து வெளியிட்டுவிடுவேன்..” - இணை தயாரிப்பாளர் மீது பிரபல நடிகை பாலியல் புகார் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

அண்மை காலமாக திரை பிரபலங்கள் தாங்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளதாக பகிரங்கமாக குற்றம்சாட்டி வருகின்றனர். சமீபத்தில் கூட ரவி கிஷன் என்ற பிரபல நடிகர் தன்னை சக நடிகை இரவு நேரத்தில் அழைத்ததாகவும், மற்றொரு நாள் தனது படத்தின் இயக்குநர் தன்னை மசாஜ் சென்டர் அழைத்ததாகவும் பரபரப்பான குற்றசாட்டை வைத்தார்.

இது பாலிவுட் வட்டாரத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து தற்போது பிரபல பெங்காலி நடிகை ஸ்வஸ்திகா முகர்ஜி என்பவர் தனது படத்தின் இணை தயாரிப்பாளர் தன்னிடம் அத்துமீறுவதாகவும், தன்னை பற்றி ஆபாசமாக சித்தரித்து புகைப்படங்களை வெளியிடப்போவதாக மிரட்டியதாகவும் பரபரப்பான புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.

“உன் போட்டோவை மார்பிங் செய்து வெளியிட்டுவிடுவேன்..” - இணை தயாரிப்பாளர் மீது பிரபல நடிகை பாலியல் புகார் !

பெங்காலி மொழி நடிகைகளில் ஒருவர்தான் ஸ்வஸ்திகா முகர்ஜி. 42 வயதாகும் இவரது தந்தை சாந்து முகோபத்யாய் என்பவரும் பெங்காலியில் பிரபல துணை நடிகராக இருந்தவர். அதன் வாயிலாகவே ஐவரும் சினிமாவில் அறிமுகமானார். ஆரம்பத்தில் பெங்காலி மொழி படங்களில் மட்டுமே நடித்து வந்த இவர், அதன்பிறகு இந்தி திரையுலகிலும் அறிமுகமானார்.

இந்தி பெங்காலி என மாறி மாறி படங்களில் நடித்து வந்த இவர், சுஷாந்த் சிங்கின் இறுதி படமான 'Dil Bechara' படத்திலும் நடித்துள்ளார். மேலும் வெப் சீரிஸிலும் நடித்து வரும் இவர் கடந்த ஆண்டு சித்தார்த் நடிப்பில் வெளியான 'Escaype Live' என்ற வெப் தொடரிலும், 'Criminal Justice: Adhura Sach' என்ற வெப் தொடரிலும் நடித்துள்ளார்.

“உன் போட்டோவை மார்பிங் செய்து வெளியிட்டுவிடுவேன்..” - இணை தயாரிப்பாளர் மீது பிரபல நடிகை பாலியல் புகார் !

தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர், தற்போது அரிந்தம் பட்டாச்சார்யா இயக்கத்தில் ஷிபுர் (Shibpur) என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த சூழலில் தனது படத்தின் இணை தயாரிப்பாளர் சந்தீப் சர்கார் தன்னை பாலியல் ரீதியாக மிரட்டுவதாகவும், அதற்கு தான் இணங்கவில்லை என்றால், தன்னை பற்றி ஆபாச போட்டோக்களை மார்பிங் செய்து வெளியிடுவதாகவும் பகிரங்க மிரட்டல் விடுவதாக கடந்த மாதம் கொல்கத்தா கோல்ஃப் கிரீன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து அண்மையில் ஒரு பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார். அப்போது பேசிய அவர், "Shibpur படத்தின் ஷூட்டிங்போது சந்தீப் சர்காரை எனக்கு தெரியாது. அதன்பிறகு அவர் அறிமுகம் கிடைத்தது. திடீரென்று ஒருநாள் சந்தீப் சர்கார் என்னை மிரட்டி இமெயில்கள் அனுப்பத் துவங்கினார்.

“உன் போட்டோவை மார்பிங் செய்து வெளியிட்டுவிடுவேன்..” - இணை தயாரிப்பாளர் மீது பிரபல நடிகை பாலியல் புகார் !

மேலும் அவரது ஆசைக்கு நான் இணங்கவில்லை என்பதால் தொடர்ந்து மிரட்டினார். நான் ஒரு அமெரிக்க குடிமகன். எனக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றால் அமெரிக்க தூதரகத்தை தொடர்பு கொண்டு உனக்கு அமெரிக்க விசா கிடைக்க முடியாதபடி செய்துவிடுவேன் என்றும் மிரட்டல் விடுத்தார்.

அதுமட்டுமின்றி யாரிடம் சென்று புகார் கொடுத்தாலும் பரவாயில்லை, போலீஸ் கமிஷனர், முதல்வர் உள்ளிட்டோர் வரை செல்வேன் எனவும் மிரட்டினார். ஒத்துழைப்பு என்றால் என்னவென்று எனக்கு சுத்தமாக புரியவில்லை. என் தொடர்பான காட்சிகளில் நடித்து முடித்தேன். அதற்கான டப்பிங்கும் பேசினேன். படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளக் கூடாது என்று நான் ஒருபோதும் நினைத்தது இல்லை.

“உன் போட்டோவை மார்பிங் செய்து வெளியிட்டுவிடுவேன்..” - இணை தயாரிப்பாளர் மீது பிரபல நடிகை பாலியல் புகார் !

எனக்கு மட்டும் இல்லை என் மேனேஜருக்கும் மிரட்டல் இமெயில் வந்திருக்கிறது. சந்தீப் சர்காரின் நண்பர் என்று கூறி ரவிஷ் சர்மா என்பவர் மிரட்டில் இமெயில் அனுப்பினார். தான் ஒரு திறமையான கம்ப்யூட்டர் ஹேக்கர் என்றார்.

உன் புகைப்படங்களை மார்ஃபிங் செய்து ஆபாச (பார்னோகிராபி) இணையதளங்களுக்கு அனுப்பி வைத்துவிடுவேன் என்றார். மேலும் மார்ஃபிங் செய்து என்னை நிர்வாணமாக மாற்றிய இரண்டு புகைப்படங்களையும் அனுப்பி வைத்தார் ரவிஷ் சர்மா. இதனால் நான் போலீசில் புகார் அளித்துள்ளேன்" என்றார். இது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories