India
புதிய உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை.. சலனமில்லாமல் வரி விதித்து மக்களை அவதியடையச் செய்யும் மோடி அரசு!
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில் பெட்ரோல், டீசல் விலை தினமும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும், வைரஸ் பரவலை தடுக்க கடந்த ஆண்டு மார்ச் இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் மாதம் முதல் அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.
அதன்படி, சென்னையில் நேற்று டீசல் 80.65 ரூபாய் இருந்த நிலையில் 24 காசுகள் உயர்ந்து இன்று 80.89 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல, பெட்ரோல் லிட்டருக்கு 87.83 ரூபாய் என இருந்த நிலையில், 22காசுகள் காசு உயர்ந்து 88.05 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்த நடைமுறை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.
இந்த விலை உயர்வு புதிய உச்சத்தை எட்டியிருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலைவாசியும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மோடி அரசோ எந்தவொரு சலனமும் இல்லாமல் எரிபொருட்கள் மீதான வரியை விதித்துக்கொண்டே வருகிறது.
Also Read
-
“தவெக ஆட்சிக்கு வந்து 3 மாதம் ஆச்சு.. ஒரு திட்டமும் இல்லை.. நிதியும் ஒதுக்கல” : கே.என்.நேரு காட்டம்!
-
குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டம் கைவிட்டது ஏன்? : பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
-
திமுக ஆட்சி தொடர்ந்தால் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை அடைந்திருப்போம் - ஆஸ்டின் பதிலடி!
-
”இந்த திட்டத்தில் கை வைத்தால் த.வெ.க அரசின் கதை முடிந்தது” - CPM செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!
-
பொய்யிலே பிறந்து... பொய்யிலே புரண்டு... : விஜயின் பொய்களை வெளிச்சம் போட்டு காட்டும் முரசொலி!