Cinema
“அழியாத கோலங்கள் முதல் துக்ளக் தர்பார் வரை..” : பிரபல தமிழ் பட நடிகர் பிரதாப் போத்தன் காலமானார் !
கேரள மாநிலம் திருவானந்தபுரத்தை சேர்ந்த இவர், 1978 ஆம் ஆண்டு வெளியான மலையாள திரைப்படமான 'ஆரவம்' படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் 1979 ஆம் ஆண்டு தமிழில் வெளியான 'அழியாத கோலங்கள்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.
இதையடுத்து தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என்று பல்வேறு மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வந்தார். இதனிடையே தமிழில் இயக்குநராகவும் களமிறங்கினார். தமிழில் பெரிதாக ஹிட் அடித்த 'மை டியர் மார்த்தாண்டன்', 'சீவலப்பேரி பாண்டி', 'லக்கி மேன்' போன்ற திரைப்படங்களை இவரே எழுதி, இயக்கியுள்ளார்.
தற்போது மலையாளம், தமிழ் படங்களில் நடித்து வந்த இவர், அண்மையில் ஜோதிகா நடிப்பில் வெளியான 'பொன்மகள் வந்தாள்', விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'துக்ளக் தர்பார்' உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். மேலும் தமிழ், மலையாள திரைப்படங்களில் நடித்தும் வந்தார். 69 வயதாகும் இவருக்கு சமீபத்தில் இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்ப்பட்டது
இந்த நிலையில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் வசித்து வந்த இவர், இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவு திரை உலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், திரை பிரபலங்கள், ரசிகர்கள் இவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
”கொத்தடிமை ஒழிப்பு நடவடிக்கை.. இண்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு”! - முழு விவரம்!
-
“LPG விலையை ஏற்றுவது சரியல்ல” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
”MI-யுடன் CSK தோற்றால் பிளே ஆப் வாய்ப்பு என்னாகும்? காத்திருக்கும் CSK ரசிகர்கள்” : முழு விவரம்!
-
மோடி அரசின் தேர்தலுக்கான பரிசு இது : எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு ராகுல் காந்தி எம்.பி கண்டனம்!
-
”கிடு கிடு விலை உயர்வில் சிலிண்டர்கள்.. 5 மாநில தேர்தல் முடிந்ததும் ஆட்டம் தொடக்கம்” : முழு விவரம் அறிக!