Cinema
‘விஷால் 31’ அப்டேட் : ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு.. ஒரே ஷெட்யூலில் முடிக்க திட்டம்!
அரிமா நம்பி, இருமுகன் இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் தன் நண்பர் ஆர்யாவுடன் `எனிமி' படத்தில் நடித்திருக்கிறார் விஷால். இது அவருடைய 30வது படம். இதற்கு அடுத்ததாக புதுமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்கத்தில் நடிக்கிறார் விஷால். இது விஷாலின் 31வது படம்.
இப்படத்தின் பூஜை கடந்த மாதம் போடப்பட்டது. யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்தப் படத்துக்கு விஷால்31 என தற்காலிகமாக டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. படத்தின் ஷூட்டிங்கை ஒரே ஷெட்யூலில் முடித்துவிடலாம் என தொடங்கினார்கள், ஆனால் ஊரடங்கால் தொடங்கப்படமால் இருந்தது.
இப்போது இரண்டு நாட்களுக்கு முன்னர் படத்தின் மொத்த டீமும் கிளம்பி ஹைதராபாத் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் ஷூட் துவங்கியிருக்கிறார்கள். இந்தத் தகவலை விஷாலே தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.
"விஷால் 31 ஷூட்டை ஹைதராபாத்தில் தொடங்கியிருக்கிறோம். ஒரே ஷெட்யூலில் இந்த ஷூட்டை நடத்தி ஜூலை மாத இறுதிக்குள் முடிக்க இருக்கிறோம். எல்லா பாதுகாப்பு விதிகளையும் பின்பற்றியே வேலை செய்கிறோம். மறுபடி பணிகளைத் தொடங்கியதில் மகிழ்ச்சி" எனக் கூறியிருக்கிறார்.
Also Read
-
இந்திய உரிமையை நிலைநாட்ட பேச்சுவார்த்தை தொடங்குமா ஒன்றிய பா.ஜ.க. அரசு? : முரசொலி தலையங்கம் கேள்வி!
-
“ஏழை மாணவர்களின் விடுதிகள், இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்!” : முதலமைச்சர் அறிவிப்பு!
-
பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தவர் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் !
-
"பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது" - அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா பேட்டியால் சலசலப்பு !
-
அங்கன்வாடி மையங்கள் மூடலா? மீண்டும் போலி செய்தி வெளியிட்ட தினமலர்.. உண்மை என்ன? - விவரம் உள்ளே!