சினிமா

ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் பிரேம்ஜி.. ‘தமிழ் ராக்கர்ஸ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

`தமிழ் ராக்கர்ஸ்' என்ற படத்தில்நடிகர் பிரேம்ஜி நடித்து வருகிறார்.

ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் பிரேம்ஜி.. ‘தமிழ் ராக்கர்ஸ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை 28, கோவா உள்ளிட்ட பல்வேறு படங்களில் காமெடி நடிகராக தோன்றியவர் பிரேம்ஜி. தன்னுடைய பாடி லாங்குவேஜால் ரசிகர்கள நல்லாவே என்டர்டெயின் செய்யும் நபர். பிரேம்ஜி, சந்திரமுகி படத்துல வர்ற ”என்ன கொடுமை சரவணன்” டயலாக்கை கலாய்த்து காமெடி செய்ததை ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரத்தில் மறக்க மாட்டார்கள்.

இந்த நிலையில் `தமிழ் ராக்கர்ஸ்' என்ற படத்தில் இவர் நடித்து வருகிறார். பரணி ஜெயபால் இயக்கத்தில் உருவாகிவரும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பிரேம்ஜி ஷேர் செய்திருக்கிறார்.

ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் பிரேம்ஜி.. ‘தமிழ் ராக்கர்ஸ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

இதில் வித்தியாசமான கெட்டபில் இருக்கிறார் பிரேம்ஜி. கண்டிப்பாக டைட்டிலை வைத்து பாக்கும்போது காமெடி படமாக இருக்கும் என்பது தெரிகிறது. இந்தப் படத்துக்கு பிரேம்ஜி இசையமைக்க இருக்கிறார்.

படத்தின் பாடல் வரிகளை அவரோட தந்தை கங்கை அமரன் எழுதியிருக்கிறார். இந்தப் படத்தில் ப்ரேம்ஜிக்கு ஜோடியாக மீனாட்ஷி தீட்ஷித் நடிக்கிறார். கே பிச்சாண்டி தயாரிப்பில் உருவாகுறம் இந்த படத்துடைய ஷூட்டிங் சீக்கிரம் முடியும் என சொல்லப்படுகிறது.

banner

Related Stories

Related Stories