உலகம்

வெளிநாட்டுக்கு பயணம் செய்ததில் முறைகேடு : இலங்கை முன்னாள் அதிபர் கைது... விவரம் உள்ளே !

வெளிநாட்டுக்கு பயணம் செய்ததில் முறைகேடு : இலங்கை முன்னாள் அதிபர் கைது... விவரம் உள்ளே !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இலங்கையின் முக்கிய அரசியல் தலைவரும், முன்னாள் அதிபருமான ரணில் விக்ரமசிங்கே இன்று கைது செய்யப்பட்டுள்ளார். தனிப்பட்ட பயணத்திற்கு அரச நிதி பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கின் கீழ் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க அதிபராக இருந்த காலத்தில், அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக லண்டனுக்கு பயணம் செய்தபொது, இதற்காக அரசின் நிதி பயன்படுத்தப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

வெளிநாட்டுக்கு பயணம் செய்ததில் முறைகேடு : இலங்கை முன்னாள் அதிபர் கைது... விவரம் உள்ளே !

இந்த வழக்கு குற்றப் புலனாய்வு அதிகாரிகள்(CID ) விசாரித்து வந்த நிலையில், ரணில் விக்ரமசிங்கேவிடம் வாக்குமூலம் வாங்க இன்று அவர் அழைக்கப்பட்டார். அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்ட நிலையில், அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை வரலாற்றில் முன்னாள் அதிபர் ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.முன்னதாக இது குறித்து முன்னாள் அதிபர் ரணில் விக்கரமசிங்கவின் செயலாளர் சமன் ஏகநாயக்க மற்றும் அவரது பிரத்தியேக செயலாளர் சாண்ட்ரா பெரேரா ஆகியோரிடமிருந்து சிஐடி வாக்குமூலங்களைப் பதிவு செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories