உலகம்

ரஷ்யாவில் நிலநடுக்கம் : 12 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை - இந்தியாவை தாக்குமா?

ரஷ்யாவில் அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து 12 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் நிலநடுக்கம் : 12 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை - இந்தியாவை தாக்குமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ரஷ்யாவின் கம்சத்கா தீவில் இன்று 8.7 ரிக்டர் அளவில் அதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தை அடுத்து ரஷ்யாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் உணரப்பட்டுள்ளது. கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ரஷ்யா, ஹவாய், சாலமான் தீவு, ஜப்பான் ஆகிய பகுதிகளில் 3 மீட்டர் அளவிற்கு கடல் அலைகள் எழுந்துள்ளது. அப்போது கடற்கரையில் இருந்த மக்கள் ராட்சத அலைகளை கண்டு அங்கிருந்து அலறியடித்து ஓடியுள்ளனர்.

70 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தை அடுத்து ரஷ்யா, ஜப்பான், சீனா, அமெரிக்கா, பெரு, ஈக்வடார் உள்ளிட்ட 12 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கையை அடுத்து 9 லட்சம் பேர் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.

அதேபோல் அமெரிக்காவின் கடலோர பகுதியிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்தியாவிற்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இருந்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories