உலகம்

"நிதி ஒதுக்காத நாடுகள் மீது ரஷ்யா படையெடுத்தால் அதை ஆதரிப்பேன்" - டொனால்ட் டிரம்ப் கருத்தால் சர்ச்சை !

டொனால்ட் டிரம்ப் நேட்டோ கூட்டமைப்பு நாடுகள் குறித்து பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

"நிதி ஒதுக்காத நாடுகள் மீது ரஷ்யா படையெடுத்தால் அதை ஆதரிப்பேன்" - டொனால்ட் டிரம்ப் கருத்தால் சர்ச்சை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக களமிறங்கிய டொனால்ட் டிரம்ப் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தி அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றார்.

தான் அதிபராக இருந்த 4 ஆண்டு காலத்தில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய டிரம்ப் 2020-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலிலும் குடியரசுக் கட்சி வேட்பாளராக இரண்டாவது முறையாக போட்டியிட்டார். ஆனால் அவர் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட்ட ஜோ பைடனிடம் தோல்வியைத் தழுவினார்.

எனினும் இந்த ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் அவர் மீண்டும் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட முயன்று வருகிறார். தற்போதைய நிலையில், அவர் குடியரசுக் கட்சி கட்சி வேட்பாளர்கள் போட்டியில் முன்னிலையில் உள்ளார்.

"நிதி ஒதுக்காத நாடுகள் மீது ரஷ்யா படையெடுத்தால் அதை ஆதரிப்பேன்" - டொனால்ட் டிரம்ப் கருத்தால் சர்ச்சை !

இந்த நிலையில், பிரச்சாரத்தின்போது அவர் நேட்டோ கூட்டமைப்பு நாடுகள் குறித்து பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரச்சாரத்தில்போது பேசிய அவர், "நேட்டோ கூட்டமைப்பு நாடுகளுக்காக அமெரிக்கா அதிகம் செலவு செய்து வருகிறது. ஐரோப்பிய நாடுகள் குறைவாகதான் நிதி ஒதுக்குகின்றன. எனவே ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் நேட்டோ கூட்டமைப்புக்கு அதிக நிதி ஒதுக்கவேண்டும்.

நேட்டோ கூட்டமைப்புக்கு நிதி ஒதுக்காத நாடுகள் மீது ரஷ்யா படையெடுத்தால் அமெரிக்கா அவர்களுக்கு உதவாது. அந்த படையெடுப்பை நான் ஆதரிப்பேன்" என்று கூறியுள்ளார். இதற்கு அவரின் சொந்த கட்சியை சேர்ந்த உறுப்பினர்களே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து வெள்ளை மாளிகை தரப்பில் வெளியான அறிக்கையில், "அமெரிக்காவின் நெருங்கிய கூட்டணி நாடுகள் மீது சர்வாதிகார நாடுகள் படையெடுப்பதை டிரம்ப் ஊக்குவிக்கிறார். இது நேட்டோ கூட்டமைப்பில் பிரச்சனைகளை ஏற்படுத்தும்" என்று கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories