உலகம்

கல்லீரல் மாற்றம் அறுவை சிகிச்சை செய்த 48 மணி நேரம்.. Insta பிரபலத்துக்கு நேர்ந்த சோகம் !

கல்லீரல் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட 48 மணி நேரத்தில், 19 வயது இளம்பெண் Insta பிரபலம் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கல்லீரல் மாற்றம் அறுவை சிகிச்சை செய்த 48 மணி நேரம்.. Insta பிரபலத்துக்கு நேர்ந்த சோகம்  !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சமூக வலைதளங்களில் பிரபலமாக அறியப்பட்டவர் மரியா சோபியா வலிம் (Maria Sofia Valim). 19 வயது இளம்பெண்ணான இவர் பிரேசில் நாட்டை சேர்ந்தவர். இவர் தினமும் தனது இன்ஸ்டா உள்ளிட்ட சமூக வலைதள பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்து வந்துள்ளார். தினமும் புகைப்படம் பதிவிடுவது, வீடியோ வெளியிடுவது என்று இருந்து வந்தார்.

அதோடு தனது உடற்பயிற்சி, மேக் அப் உள்ளிட்டவைகள் பற்றியும் தான் எந்த வித பிராண்டுகள் உபயோகிப்பேன் என்பது பற்றியும் விளம்பரமும் செய்து வந்தார். தொடர்ந்து சமூக வலைதளங்களில் இந்த பெண் மிகவும் ஆக்டிவாக இருந்து வந்த காரணத்தினாலே, இவருக்கு நாளுக்கு நாள் ஃபாலோயர்கள் அதிகரித்த வண்ணமாக இருந்தது.

கல்லீரல் மாற்றம் அறுவை சிகிச்சை செய்த 48 மணி நேரம்.. Insta பிரபலத்துக்கு நேர்ந்த சோகம்  !

இந்த சூழலில் இவருக்கு அண்மையில் உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு, கல்லீரலில் பிரச்னை என்றும், விரைவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து இவருக்கு கல்லீரல் வழங்க கொடையாளர் முன்வந்தார். பின்னர் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்ற வெற்றிகரமாக முடிந்துவிட்டது. இதையடுத்து அவர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்தார். இந்த நிலையில், அவர் திடீரென தற்போது உயிரிழந்துள்ளார். இவரது உயிரிழப்புக்கு காரணம் குறித்து மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர்.

எனினும் அறுவை சிகிச்சை நிறைவடைந்து 48 மணி நேரத்தில் மரியா உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இளம் வயதில் இன்ஸ்டா பிரபல பெண் ஒருவர் உயிரிழந்ததற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது தந்தை சியாராவில் உள்ள காசியாவின் மேயராக இருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

banner

Related Stories

Related Stories