சேலம் மத்திய மாவட்ட தி.மு.க மற்றும் ஓமலூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க சார்பில் திராவிட மாடல் அரசின் 4 ஆண்டுகால ஆட்சியின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் ஓமலூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அமைச்சர் ராஜேந்திரன், இந்திய துணை கண்டத்திலேயே வேறு எந்த மாநிலத்திலும் இதுவரை இல்லாத வகையில் தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார்.
விவசாயிகள், நெசவாளர்கள், பெண்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெரும் வகையில் திட்டங்களை வகுத்து எல்லார்க்கும் எல்லாம் என்ற வகையில் திராவிட மாடல் ஆட்சியை ஒரு முன்மாதிரியான ஆட்சியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார்.
இந்தி திணிப்பு, நிதியை நிறுத்தி வைப்பது, தமிழ்நாட்டிற்கு திட்டங்களை ஒதுக்காமல் வஞ்சிப்பது என ஒன்றிய பாசிச பா.ஜ.க அரசு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. தற்போது5000 ஆண்டுகளுக்கு முன்பான பழமையான தமிழ் கலாச்சாரத்தை தெரிய கூடாது என்ற எண்ணத்தில் கீழடியை தடுத்து நிறுத்துகிறது.
இப்படி தமிழ்நாட்டை ஒன்றிய அரசு வஞ்சித்து வந்தாலும், தமிழ் மொழியை, இனத்தை காக்கும் தலைவராக தமிழ்நாடு முதலமைச்சர் உள்ளார். ஆனால் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி , பா.ஜ.கவிற்கு ஊதுகுழலாக மாறி, அவர்களுக்கு அடிமையாக உளறி கொண்டு இருக்கிறார். 2026 தேர்தலில் பா.ஜ.க, அ.தி.மு.கவை மக்கள் அடித்து விரட்டுவார்கள் என்பது உறுதி” என தெரிவித்துள்ளார்.