தமிழ்நாடு

மருத்துவ படிப்பில் சேர 72,743 பேர் விண்ணப்பம் : கலந்தாய்வு எப்போது?

மருத்துவம்/பல் மருத்துவ படிப்புக்கு போலிச்சான்றிதழ் மூலம் விண்ணப்பித்த 20 மாணவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மற்றும் 3 ஆண்டுகள் கலந்தாய்வில் கலந்து கொள்ள தடை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.

மருத்துவ படிப்பில் சேர  72,743 பேர் விண்ணப்பம் : கலந்தாய்வு எப்போது?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் இன்று (16.07.2025) சைதாப்பேட்டை, 140வது வார்டு, சென்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.5.25 கோடி மதிப்பீட்டில் நவீன கலையரங்கம் கட்டுமானப் பணி, ரூ.3.55 கோடி மதிப்பீட்டில் ரெட்டிக்குப்பம் சாலை மற்றும் கோடம்பாக்கம் சாலையில் 455 மீட்டர் மழைநீர் வடிகால்வாய் கட்டுமானப் பணி மற்றும் 142வது வார்டு, திடீர் நகரில் ரூ.61 இலட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் ஓரக்கல்வாய் கட்டும் பணியினை தொடங்கி வைத்து ஆய்வு செய்தார்.

பிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

இளங்கலை மருத்துவப்பட்டப்படிப்பு கலந்தாய்வு தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இளங்கலை மருத்துவம்/BDS பல் மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கு கடந்த ஜீன் மாதம் 06 ஆம் தேதியிலிருந்து ஜீன் 29 ஆம் தேதி வரை பெறப்பட்டது. அதில் 72,743 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இந்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த விண்ணப்பங்களில் ஒரு சில விண்ணப்பங்கள் சான்றிதழ்களை இணைக்க மறந்து விண்ணப்பத்திருப்பார்கள், அவர்களுக்கான கால அவகாசம் இரண்டு நாட்கள் வழங்கப்பட்டது. இந்த இரண்டு நாட்களில் எந்தெந்த மாணவர் எந்தெந்த சான்றிதழ்களை இணைக்கவில்லையோ அதனை இணைப்பதற்குரிய கால அவகாசமாக 2 நாட்கள் தரப்பட்டது. வழங்கப்பட்டிருக்கும் 2 நாட்களில் சான்றிதழ்களை இணைத்து மீண்டும் தந்தால் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு தகுதி பட்டியல் வெளியிடப்படும்.

மருத்துவ படிப்பில் சேர  72,743 பேர் விண்ணப்பம் : கலந்தாய்வு எப்போது?

தகுதி பட்டியல் சரிபார்க்கப்பட்டிருக்கும்போது 20 பேருடைய போலிச் சான்றிதழ்கள் இருப்பது கண்டறியப்பட்டது. 20 மாணவர்கள் தங்களுடைய சான்றிதழ்கள் போலியாக விண்ணப்பத்திருக்கிறார்கள். எனவே அந்த 20 மாணவர்களுக்கும் கலந்தாய்வில் கலந்து கொள்வதற்குரிய தகுதி நீக்கம் செய்யப்படவிருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் 3 வருடங்களுக்கு கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கு தடை செய்யப்பட்டிருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் இவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் தொடர இருக்கிறது. 20 மாணவர்களில் 7 மாணவர்கள் பிறப்பிட சான்றிதழ்களை போலியாக தந்திருக்கிறார்கள். 9 மாணவர்கள் பிறப்பிட சான்றிதழ்கள் மற்றும் சாதிச்சான்றிதழ்களை போலியாக தந்திருக்கிறார்கள். 4 மாணவர்கள் NRI தகுதிக்கான தூதரக சான்றிதழ்களை போலியாக தந்திருக்கிறார்கள்.

ஆக போலியான சான்றிதழ்களை வழங்கிய 20 மாணவர்களுக்கு சட்ட ரீதியான நடவடிக்கையும், 3 ஆண்டுகள் கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கும் தடை விதித்தும் நடவடிக்கை எடுக்கப்படவிருக்கிறது.

இந்த சான்றிதழ்களை சரிபார்ப்பதற்குரிய இறுதி நாளாக 18.07.2025 காலை 10 மணி வரை என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. IRT மற்றும் முன்னாள் இராணுவத்தினர் பரிசீலினை தற்போது நடந்து வருகிறது. அவர்களுக்கும் 2 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட உள்ளது.

இந்த சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலினை முடிந்து, இறுதி பட்டியல் வருகின்ற 25.07.2025 காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. இந்த பட்டியல் வெளியிடப்பட்டவுடன் ஒன்றிய அரசின் கால அட்டவணைப்படி 30.07.2025 அன்று முதல் கலந்தாய்வு நடத்தப்படவிருக்கிறது.

banner

Related Stories

Related Stories