உலகம்

"ரஷ்யா -உக்ரைன் போர் அமெரிக்காவுக்கு ஒரு நல்ல முதலீடு" - அமெரிக்க முன்னாள் மாகாண ஆளுநர் சர்ச்சை கருத்து !

ரஷ்யா -உக்ரைன் போர் அமெரிக்காவுக்கு ஒரு நல்ல முதலீடு என முன்னாள் நியூ ஜெர்சி ஆளுநரும் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான கிறிஸ் கிறிஸ்டி கூறியுள்ளார்.

"ரஷ்யா -உக்ரைன் போர் அமெரிக்காவுக்கு ஒரு நல்ல முதலீடு" - அமெரிக்க முன்னாள் மாகாண ஆளுநர் சர்ச்சை கருத்து !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தற்போது ஒன்றரை வருடத்தை தாண்டியும் தற்போது உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.

அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் உக்ரைனின் மேற்கு பகுதியில் பெரும்பாலான பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.

இதுதவிர உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யா மீது பொருளாதாரத் தடையும் விதித்துள்ளனர். இத்தனையும் மீறி ரஷ்யா தொடர்ந்து போரைத் தொடர்ந்து வருகிறது. அதேபோல உக்ரைனும் பின்வாங்காமல் தொடர்ந்து ரஷ்யாவை எதிர்த்துப் போரிட்டு வருகிறது.

"ரஷ்யா -உக்ரைன் போர் அமெரிக்காவுக்கு ஒரு நல்ல முதலீடு" - அமெரிக்க முன்னாள் மாகாண ஆளுநர் சர்ச்சை கருத்து !

இந்த நிலையில், ரஷ்யா -உக்ரைன் போர் அமெரிக்காவுக்கு ஒரு நல்ல முதலீடு என முன்னாள் நியூ ஜெர்சி ஆளுநரும் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான கிறிஸ் கிறிஸ்டி கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், "அமெரிக்க உதவி இல்லாமல் போயிருந்தால், உக்ரைன் இப்போது ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும். உக்ரைனுக்கு அமெரிக்க வீரர்கள் யாரும் தேவையில்லை என்றும், போரில் வெற்றி பெற ஆயுதங்கள் மட்டுமே தேவை.

தற்போது ஒரு வருடத்திற்கான உக்ரைன் இராணுவ பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் தொகை 4% க்கும் குறைவாக உள்ளது. உக்ரேனிய இராணுவம் ஒரு சொட்டு அமெரிக்க இரத்தம் இல்லாமல் ரஷ்ய இராணுவத் திறனை 50% சிதைத்துவிட்டது. இது எங்களுக்கு முதலீட்டில் நல்ல வருமானம் என்று எனக்குத் தோன்றுகிறது. எனவே இதனை நாம் அதை இரட்டிப்பாக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories