உலகம்

17 முறை கத்தி குத்து.. அப்படியும் ஆத்திரம் அடங்காததால் மனைவி மீது காரை ஏற்றி இறக்கிய கொடூர கணவன்!

கணவரே மனைவியை 17 முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

17 முறை கத்தி குத்து.. அப்படியும் ஆத்திரம் அடங்காததால் மனைவி மீது காரை ஏற்றி இறக்கிய கொடூர கணவன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

அமெரிக்காவின் புளோரிடாவில் வசித்து வருபவர் பிலிப் மேத்யூ - மெரின் ஜாய் தம்பதி. இந்திய வம்சாவளியினரான இவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமானது. இதில் மெரின் ஜாய் அங்கிருக்கும் மருத்துவமனை ஒன்றில் நர்ஸாக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது.

இந்த சூழலில் கடந்த சில மாத காலமாக கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடு நிலவியுள்ளது. அவர்கள் 2 பேரின் குடும்பத்தகராறு காரணமாக இவர்களுக்குள்ளும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் மெரின் ஜாய், தனது கணவரை பிரிந்து வாழ முடிவு செய்துள்ளார். இதனை அவரிடம் கூறும்போது, அவர் மிகுந்த கோபம் கொண்டுள்ளார். மேலும் விவகாரத்து கொடுக்க முடியாது என்றும் மறுத்துள்ளார்.

17 முறை கத்தி குத்து.. அப்படியும் ஆத்திரம் அடங்காததால் மனைவி மீது காரை ஏற்றி இறக்கிய கொடூர கணவன்!

இருப்பினும் தனது முடிவில் மாற்றம் இல்லாமல் மெரின் ஜாய் இருந்துள்ளார். இதனால் அவரது கணவர், அவரை சமாதான படுத்தவும் முயன்றுள்ளார். ஆனால் சமாதானம் ஆகவில்லை. தொடர்ந்து பிரியப்போவதாகவே தெரிவித்து வந்துள்ளார். இதனால் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார் கணவர். மேலும் தனது மனைவியை விட்டு கொடுக்கவும் அவர் நினைக்கவில்லை.

இந்த நிலையில், சம்பவத்தன்று மனைவி மெரின் ஜாய் வழக்கம்போல் பணிக்கு சென்றிருந்தார். அப்போது ஆத்திரத்தில் இருந்த கணவர், தனது மனைவியை கொலை செய்ய எண்ணியுள்ளார். அதன்படி சம்பவத்தன்று ஜாயின் மருத்துவமனைக்கு சென்று, அவர் பணி முடியும் வரை பார்க்கிங்கில் காத்திருந்துள்ளார். அப்போது மெரின் ஜாய் தனது வாகனத்தை எடுக்க வந்துள்ளார்.

17 முறை கத்தி குத்து.. அப்படியும் ஆத்திரம் அடங்காததால் மனைவி மீது காரை ஏற்றி இறக்கிய கொடூர கணவன்!

இதனை கண்ட அவரது கணவர், உடனே தனது மனைவி மீது காரை ஏற்றியுள்ளார். காரை ஏற்றியாதோடு, கீழே இறங்கி வந்து 17 முறை கத்தியால் கொடூரமாக குத்தியுள்ளார். மேலும் அவர் மீது பல முறை காரை ஏற்றி இறக்கியுள்ளார். இந்த கொடூர தாக்குதலில் மனைவி ஜாய், சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கொண்டிருந்தார்.

மனைவி மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி விட்டு கணவர் அந்த இடத்தில் இருந்து தப்பியோடியுள்ளார். தொடர்ந்து இதனை அறிந்து வந்த அக்கம்பக்கத்தினர், அவருக்கு உடனடியாக மருத்துவமனையில் வைத்தே சிகிச்சை அளித்தனர். மேலும் போலீசுக்கும் தகவல் கொடுத்தனர். உயிருக்கு போராடி கொண்டிருந்த நிலையில், தனது இந்த நிலைக்கு காரணம் தனது கணவர் என்று மரண வாக்குமூலம் அளித்த பின்னரே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் பிலிப் மேத்யூவை கைது செய்ததோடு, சிசிடிவி உள்ளிட்ட ஆதாரங்களையும் கைப்பற்றினர். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியது. இதனை விசாரித்த நீதிபதி, பிலிப்புக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. கணவரே மனைவியை கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories