உலகம்

“புதைகுழியாக மாறி வருகிறது காசா” : ஏஞ்சலினா ஜோலியின் கருத்துக்கு அவரின் தந்தையே எதிர்ப்பு !

இஸ்ரேலுக்கும் ஐநாவுக்கும் எதிராக கருத்து பதிவிட்ட ஏஞ்சலினா ஜோலிக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது.

“புதைகுழியாக மாறி வருகிறது காசா” : ஏஞ்சலினா ஜோலியின் கருத்துக்கு அவரின் தந்தையே எதிர்ப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்னை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்-அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது. இந்த சூழலில் கடந்த அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் என்ற அமைப்பு, இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது.

மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் கொல்லப்பட்டனர். ஹமாஸ் அமைப்பின் இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் இராணுவம், காசா பகுதியில் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் இதுவரை பல ஆயிரம் அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளனர்.

“புதைகுழியாக மாறி வருகிறது காசா” : ஏஞ்சலினா ஜோலியின் கருத்துக்கு அவரின் தந்தையே எதிர்ப்பு !

காசா பகுதியில் உள்ள பள்ளிகள், தங்குமிடங்கள், மருத்துவமனைப் பகுதிகள் போன்றவற்றில் ஹமாஸ் அமைப்பின் சுரங்கப்பாதைகள் அமைந்திருப்பதாக கூறி அங்கு இஸ்ரேல் இராணுவம், வான்தாக்குதல் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் அப்பாவி மக்கள் உயிரிழந்து வருவதற்கு உலக நாடுகள் பல இந்த போரை நிறுத்தும்படி அறிவுறுத்தி வருகிறது.

அதோடு இந்த போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும், ஹமாஸுக்கு ஆதரவாகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இஸ்ரேலின் கடும் தாக்குதலில் காசா பகுதியில் உள்ள பொதுமக்கள் பலரும் பாதிக்கபட்டு வருகின்றனர். இந்த சூழலில் பிரபல நடிகை ஏஞ்சலினா ஜோலி பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு இஸ்ரேல் அதிபர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“புதைகுழியாக மாறி வருகிறது காசா” : ஏஞ்சலினா ஜோலியின் கருத்துக்கு அவரின் தந்தையே எதிர்ப்பு !

உலகம் முழுவதும் பெரிதாக பேசப்படும் இந்த போருக்கு எதிராக சில பிரபலங்கள் பல்வேறு கருத்துகள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி, பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக கடந்த 5 நாட்களுக்கு முன்னர் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், "காசா மீது நடத்தப்பட்ட குண்டுவீச்சு தாக்குதலானது, மக்கள் மக்கள் எங்கும் தப்பிச் செல்ல கூடாது என்பதால் வேண்டுமென்றே நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக திறந்தவெளி சிறைச்சாலையாக உள்ள காசா, தற்போது வெகுஜன புதைகுழியாக மாறி வருகிறது. கொல்லப்பட்டவர்களில் 40% அப்பாவி குழந்தைகள். மொத்த குடும்பங்களும் கொல்லப்படுகின்றன.

பல அரசாங்கங்களின் தீவிர ஆதரவுடன் உலகம் பார்த்துக்கொண்டிருக்கும் வேளையில், மில்லியன் கணக்கான பாலஸ்தீனிய குடிமக்கள் - குழந்தைகள், பெண்கள், குடும்பங்கள் - சர்வதேச சட்டத்திற்கு எதிராக உணவு, மருந்து மற்றும் மனிதாபிமான உதவிகள் இல்லாமல் அனைவரும் ஒட்டுமொத்தமாக தண்டிக்கப்படுகிறார்கள்

மனிதாபிமான போர் நிறுத்தத்தைக் கோர மறுப்பதன் மூலமும், ஐ.நா. பாதுகாப்புச் சபை இரு தரப்பிலும் ஒன்றைத் திணிப்பதைத் தடுப்பதன் மூலமும், உலகத் தலைவர்கள் இந்தக் குற்றங்களுக்கு உடந்தையாக உள்ளனர்." என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏஞ்சலினா ஜோலியின் தந்தை ஜான் வாயிட்
ஏஞ்சலினா ஜோலியின் தந்தை ஜான் வாயிட்

UNHCR-ன் சிறப்பு தூதராக பணியாற்றும் ஏஞ்சலினா ஜோலி இவ்வாறு ஐ.நா-வுக்கு எதிராக தெரிவித்துள்ள கருத்து பலர் மத்தியிலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவரது பதிவு இஸ்ரேலுக்கு எதிராக இருப்பதால் ஒரு தரப்பினர் இவருக்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், மற்றொரு தரப்பினர் இவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அதன்படி ஏஞ்சலினா ஜோலியின் கருத்துக்கு அவரது தந்தை ஜான் வாயிட் (Jon Voight) கண்டனம் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "இது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. பலரைப் போலவே எனது மகளுக்கும் கடவுளின் மரியாதை, உண்மைகள் பற்றிய புரிதல் இல்லை. இது கடவுளின் தேசம் - புனித பூமி - யூதர்களின் பூமியின் வரலாற்றை அழிப்பதாகும். இது புனித பூமியின் கடவுளின் பிள்ளைகளின் நீதி. இஸ்ரேலிய இராணுவம் இஸ்ரேல் நாட்டையும் அதன் மக்களையும் பாதுகாக்க வேண்டும், இது ஒரு போர். இடதுசாரிகள் நினைப்பது போல் கலாச்சாரமாக இருக்காது.

மனிதாபிமானமற்ற பயங்கரவாதிகள், இஸ்ரேலின் அப்பாவி குழந்தைகள், தாய், தந்தை, தாத்தா, பாட்டி மீது தாக்குதல் நடத்தினர். முட்டாள்களே, இஸ்ரேல் தான் பிரச்னை என்று சொல்கிறீர்களா? நீங்கள் உங்களைப் பார்த்துக் கேட்க வேண்டும்: 'நான் யார்? நான் என்ன? என்று" என்று ஆவேசமாக பேசியிருந்தார். ஏஞ்சலினாவுக்கு எதிராக அவரது தந்தையின் இந்த கருத்து பலர் மத்தியிலும் பேசு பொருளாக மாறியுள்ளது.

இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக்
இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக்

தொடர்ந்து இஸ்ரேல் நாட்டு அதிபர் ஐசக் ஹெர்சாக் (Isaac Herzog), “காஸாவில் இப்போது போர் நடந்து வருகிறது, ஆனால் அவர்கள் உயிர்வாழ முடியாத மனிதாபிமான நெருக்கடி எதுவும் இல்லை. இஸ்ரேலிய மக்களுக்கு தான் சொல்வதைச் சொல்லி தங்களைத் தற்காத்துக் கொள்ளும் திறனை ஏஞ்சலினா ஜோலி வழங்கவில்லை.

நான் அவருடைய கூற்றுக்களை முற்றிலும் நிராகரிக்கிறேன். அவர் காசாவில் இருந்ததில்லை என்று நினைக்கிறேன். நிலத்தில் உள்ள உண்மைகளைப் பார்க்க வேண்டும். காசா சிறைச்சாலை என்றாலும் அது இஸ்ரேலால் அல்ல. காசாவில் இருந்து இஸ்ரேல் வெளியேறியது. காஸா ஈரானியத் தளம் பயங்கரவாதத்தால் நிரம்பியுள்ளது" என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஹாலிவுட்டில் இருந்து இந்த போர் பற்றி பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக எழுந்த ஒரு சில குரல்களில் ஏஞ்சலினா ஜோலியின் குரலும் ஒன்று என்பதால், ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். உலகம் முழுவதும் இந்த போரை நிறுத்த வேண்டும் என்று பலரும் குரலெழுப்பி வரும் நிலையில், ஐ.நா-வும் தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.

“புதைகுழியாக மாறி வருகிறது காசா” : ஏஞ்சலினா ஜோலியின் கருத்துக்கு அவரின் தந்தையே எதிர்ப்பு !

அண்மையில் பிரபல நடிகை மியா கலிஃபா, "பாலஸ்தீனத்தின் சூழ்நிலையைப் புரிந்து கொள்ளாமல் அவர்களது பிரச்சனையைப் பார்த்த நீங்கள் இனவெறியின் தவறான பக்கத்தில் இருப்பீர்கள். காலப்போக்கில் வரலாறு அதைக் காட்டும்" என்று பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து பதிவிட்டிருந்தார். பாலஸ்தீனப் போராட்டத்தை ஆதரித்துப் பதிவிட்டதால், இவருக்கு ஒரு சில தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்த நிலையிலும், அவரது வணிக ஒப்பத்தந்தை நிறுவனம் ஒன்று முறித்துக் கொண்டது.

ஒப்பந்தம் முறிவுக்கு மியா கலீஃபா, "ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராடும் அனைவருக்கும் என் ஆதரவு இப்போதும் எப்போதும் உண்டு. லெபனானை சேர்ந்த நான், காலனியாதிக்கத்துக்கு ஆதரவாக இருப்பேனென எப்படி முடிவு செய்தாய் முட்டாளே?" பதிலடி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

Related Stories