உலகம்

அப்போ மூதாட்டி.. இப்போ இளம்பெண்: காதுக்குள் உயிருடன் கூடு கட்டி வசித்த சிலந்தி-பயங்கரத்தின் பின்னணி என்ன?

சீனாவில் இளம்பெண் காதுக்குள் சிலந்தி ஒன்று உயிருடன் கூடு கட்டி இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அப்போ மூதாட்டி.. இப்போ இளம்பெண்: காதுக்குள் உயிருடன் கூடு கட்டி வசித்த சிலந்தி-பயங்கரத்தின் பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில், ஹுய்டோங் கவுண்டி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த சில நாட்களாக காது வலியால் தவித்து வந்துள்ளார். மேலும் காதுக்குள் இருந்து இரைச்சல் சத்தமும் கேட்டுள்ளது. இதனால் அந்த பெண் மருத்துவரை அணுகியுள்ளார். அங்கே ஆரம்பத்தில் அந்த இளம்பெண்ணுக்கு காதை பரிசோதித்து பார்த்து மருந்து கொடுத்துள்ளனர்.

இருப்பினும் வலியும் சத்தமும் விடாமல் இருந்ததால் மீண்டும் மருத்துவமனைக்கு சென்றார். அங்கே அவரது காதை பரிசோதித்தபோது எதுவும் தெரியவரவில்லை. இருந்தபோதிலும் இந்த பிரச்னை தீராததால், அவருக்கு கேமரா பொருத்தப்பட்டிருக்கும் எண்டோஸ்கோபி மூலம் ஆய்வு செய்தனர். அப்போது காதில் செவிப்பறை தாண்டி ஏதோ ஒன்று அசைவது போல் தெரியவந்தது. அதனை சிறிய கம்பியை வைத்து விலக்கிய போது, அது செவிப்பறை இல்லை என்றும் அது ஒரு கூடு என்றும் தெரியவந்தது.

அப்போ மூதாட்டி.. இப்போ இளம்பெண்: காதுக்குள் உயிருடன் கூடு கட்டி வசித்த சிலந்தி-பயங்கரத்தின் பின்னணி என்ன?

பின்னர் அதனை நீக்கி உள்ளே பார்த்தபோது உயிருடன் சிலந்தி ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை கண்ட மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அந்த சிலந்தியை மருத்துவர்கள் வெளியே எடுக்க முயன்றனர். ஆனால் அந்த சிலந்தியோ சீறுவதுபோல் செய்தது. தொடர்ந்து முயன்றதில் சில மணி நேரம் முயற்சிக்கு பிறகு உயிருடன் அந்த சிலந்தியை வெளியே மருத்துவர்கள் எடுத்தனர்.

அப்போ மூதாட்டி.. இப்போ இளம்பெண்: காதுக்குள் உயிருடன் கூடு கட்டி வசித்த சிலந்தி-பயங்கரத்தின் பின்னணி என்ன?

இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், "வலது காதில் வலி இருப்பதாக பெண் ஒருவர் சிகிச்சைக்காக வந்தார். அவது காதில் கேமரா பொருத்தப்பட்ட என்டோஸ்கோபி கருவியை வைத்து பரிசோதனை செய்தோம். அப்போது செவிப்பறை போலவே சிலந்தி வலை தென்பட்டது. முதலில் எங்களுக்கு வித்தியாசம் எதுவும் தெரியவில்லை. ஆனால் உற்று பார்த்த போதுதான் காதிற்குள் ஏதோ அசைவது தெரியவந்தது.

அப்போ மூதாட்டி.. இப்போ இளம்பெண்: காதுக்குள் உயிருடன் கூடு கட்டி வசித்த சிலந்தி-பயங்கரத்தின் பின்னணி என்ன?

அதன்பிறகுதான் காதிற்குள் சிலந்தி வலை இருப்பது தெரியவந்தது. பிறகு அதனை தீவிர முயற்சிக்கு பிறகு வெளியே எடுத்தோம். இந்த சிலந்தி பூச்சி விஷத்தன்மை அற்றது என்றும் பெண்ணின் காதில் சிறிய அளவிலான பாதிப்பு மட்டுமே ஏற்பட்டது" என்றனர். இருப்பினும் தற்போது வரை அந்த பெண்ணின் காதுக்குள் சிலந்தி எப்படி சென்றது என்று தெரியவரவில்லை.

முன்னதாக கடந்த 2020-ம் ஆண்டு இதே சீனாவில் மூதாட்டி ஒருவர் காதுக்குள் இதே போல் சிலந்தி ஒன்று கூடு கட்டி வசித்து வந்திருக்கிறது. அதனை மருத்துவர்கள் சிகிச்சையின் மூலம் அகற்றினர். அதற்கும் முன்னதாக அமெரிக்காவின் மிஸ்ஸவ்ரி பகுதியில் பெண்ணின் காதுக்குள் விஷச் சிலந்தி ஒன்று கூடு கட்டி வாழ்ந்த சம்பவம் அரங்கேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories