இந்தியா

VBG RAMG சட்டத்தை எதிர்க்கும் பஞ்சாப் : சட்டமன்றத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடிவு!

ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள VB-G RAM G சட்டத்தை எதிர்க்கும் விதமாக இன்று ஒரு நாள் சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தை கூட்டியுள்ளது பஞ்சாப் அரசு!

VBG RAMG சட்டத்தை எதிர்க்கும் பஞ்சாப் : சட்டமன்றத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடிவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2005ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில், ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் ஒரு நிதியாண்டில் 100 நாட்கள் ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.

இந்நிலையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை நீக்கிவிட்டு, "விக்ஸித் பாரத் ஜி ராம் ஜி" என ஒன்றிய அரசு மாற்றியுள்ளது. இதுவரை இத்திட்டத்திற்கான 100 சதவீத நிதியை ஒன்றிய அரசு வழங்கி வந்த நிலையில், தற்போது அதனை 60:40 ஆக ஒன்றிய அரசு மாற்றியுள்ளது.

அதாவது இந்த திட்டத்திற்கான நிதியில் 40 சதவீதத்தை மாநில அரசுகள் தான் வழங்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் மாநில அரசுகளுக்கு நிதிச்சுமை அதிகரிக்கும்.

இப்படி 100 நாள் வேலை திட்டத்தில் மாற்றியமைக்கப்பட்ட மசோதாவை அண்மையில் நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தாக்கல் செய்தது சட்டமாக்கியுள்ளது. இந்த புதிய சட்டத்திற்கு இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றன.

தமிழ்நாட்டில் கூட தி.மு.க தலைமையிலான மச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 300க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்றது.

இந்நிலையில், ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள VB-G RAM G சட்டத்தை எதிர்க்கும் விதமாக இன்று ஒரு நாள் சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தை பஞ்சாப் அரசு கூட்டியுள்ளது .VB-G RAM G சட்டத்திற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றவும், இதர மாநிலங்களை ஒருங்கிணைத்து அரசியல் ரீதியாகப் போராடவும் பஞ்சாப் அரசு திட்டமிட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories