
கோவையில் இன்று நடைபெற்ற மாபெரும் அரசு விழாவில் சுமார் 11 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.137 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
குறிப்பாக, 1500 மகளிர் சுய உதவிக்குழு சகோதரிகளுக்கு வங்கி கடன் இணைப்புகள் - 1500 பொதுமக்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள் - 211 மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகளுக்கு இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்டுள்ள ஸ்கூட்டர்கள் வாகனம் மற்றும் செவித்திறன் கருவிகள் - கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஆணைகள் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதோடு, ரூ.163 கோடி மதிப்பில் பணி நிறைவுபெற்ற திட்டங்களை திறந்து வைத்து, ரூ.32 கோடி மதிப்பிலான புதிய பணிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்வில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,”திராவிட மாடல் அரசின் சீரிய திட்டங்களால், தமிழ்நாடு 11.19 % வளர்ச்சியுடன், இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக திகழ்ந்து வருகிறது.
உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதித்துவம் வழங்கியதன் மூலம் இதுவரை மாற்றுத்திறனாளிகளுக்காக மற்றவர்கள் போராடிய சூழலை மாற்றி, மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் குரல் கொடுக்கும் அதிகாரத்தை திராவிட மாடல் அரசு வழங்கியிருக்கிறது” என தெரிவித்தார்.






