
கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரத்தில் சுமார் ரூ.10 கோடியில் Astro Turf வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச ஹாக்கி அரங்கத்தை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
இரவிலும் போட்டிகளை நடத்தும் வகையில் மின்கோபுர விளக்குகளுடனும், அனைத்து நவீன வசதிகளுடனும் 7 ஏக்கரில் சர்வதேச தரத்தில் இந்த விளையாட்டு அரங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச மற்றும் தேசிய அளவிலான ஹாக்கி போட்டிகள் சென்னை, மதுரை போன்று இனி கோவையிலும் நடைபெற உள்ளதாக துணை முதலமைச்சர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்ததாவது,“கோவை மக்களுக்கு புத்தாண்டு பரிசாக ரூ.9.67 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஹாக்கி மைதானத்தை திறந்து வைத்துள்ளேன். இனி ஹாக்கி தேசிய மற்றும் சர்வதேச போட்டிகள் கோவையிலும் நடைபெற இருக்கிறது.
இந்த அரங்கத்தை கோவையைச் சேர்ந்த ஹாக்கி வீரர், வீராங்கனைகள் சிறந்த முறையில் பயன்படுத்தி, புதிய சாதனைகள் படைக்க என் அன்பும், வாழ்த்தும்.”






