உலகம்

ரஷ்யா மீதான அச்சம்..நேட்டோ அமைப்பில் இணைந்தது பின்லாந்து.. ரஷ்யாவின் எல்லையருகே கூடாரமிடும் அமெரிக்கா !

ரஷ்யா மீதான பயம் காரணமாக இதுவரை நேட்டோ அமைப்பில் சேராமல் நடுநிலை வகித்து வந்த பின்லாந்து நேட்டோ அமைப்பில் உறுப்பினராக சேர்ந்துள்ளது.

ரஷ்யா மீதான அச்சம்..நேட்டோ அமைப்பில் இணைந்தது பின்லாந்து.. ரஷ்யாவின் எல்லையருகே கூடாரமிடும் அமெரிக்கா !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேர முயல்வதைக் கண்டித்து ரஷ்யா உக்ரைன் மேல் தொடுத்துள்ள போர் தற்போது ஒரு வருடத்தை தாண்டியும் தற்போது உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.

அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் உக்ரைனின் மேற்கு பகுதியில் பெரும்பாலான பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.

ரஷ்யா மீதான அச்சம்..நேட்டோ அமைப்பில் இணைந்தது பின்லாந்து.. ரஷ்யாவின் எல்லையருகே கூடாரமிடும் அமெரிக்கா !

இதுதவிர உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யா மீது பொருளாதாரத் தடையும் விதித்துள்ளனர். இத்தனையும் மீறி ரஷ்யா தொடர்ந்து போரைத் தொடர்ந்து வருகிறது. அதேபோல உக்ரைனும் பின்வாங்காமல் தொடர்ந்து ரஷ்யாவை எதிர்த்துப் போரிட்டு வருகிறது. , உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள் வலுவான அதிநவீன லெப்பா்ட்-2 பீரங்கிகளை உக்ரைனுக்கு வழங்கிய நிலையில், இது மோதலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துசென்றுள்ளது.

மேலும், சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திடீரென உக்ரைனுக்கு சுற்றுப்பயணம் செய்தது ரஷ்யாவின் கோவத்தை பலமடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ரஷ்யா அறிவித்த நிலையில், தற்போது தனது தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது.

ரஷ்யா மீதான அச்சம்..நேட்டோ அமைப்பில் இணைந்தது பின்லாந்து.. ரஷ்யாவின் எல்லையருகே கூடாரமிடும் அமெரிக்கா !

இந்த நிலையில், ரஷ்யா மீதான பயம் காரணமாக இதுவரை நேட்டோ அமைப்பில் சேராமல் நடுநிலை வகித்து வந்த பின்லாந்து நேட்டோ அமைப்பில் உறுப்பினராக சேர்ந்துள்ளது. இதன்மூலம் நேட்டோவில் இணையும் 31ஆவது நாடாக பின்லாந்து மாறியுள்ளது. ரஷ்யா -உக்ரைன் போருக்குப் பின் நடந்த கருத்துக்கணிப்பில் சுமார் 80% பின்லாந்து மக்கள் நேட்டோவில் இணைய வேண்டும் என கருத்து தெரிவித்த நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பின்லாந்து நாட்டின் இந்த முடிவை ரஷ்யா மிகக் கடுமையான எதித்துள்ள நிலையில், இதன் பின் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று கூறியுள்ளது. ரஷ்யாவோடு 1,340-கிமீ எல்லையை பகிர்ந்துகொள்ளும் பின்லாந்து நேட்டோவில் இணைந்துள்ளது ரஷ்யாவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ரஷ்யாவின் கிழக்கு எல்லையில் அமெரிக்க தலைமையிலான நேட்டோ அமைப்பு தனது ராணுவத்தை குவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories