உலகம்

உலகிற்கே முன்னோடியாக திகழும் தமிழ்நாடு - முதல்வரின் காலை சிற்றுண்டி திட்டத்தை பின்பற்றும் அமெரிக்கா !

மினசோட்டா கவர்னர் டிம் வால்ஸ் மாநிலத்தில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் இலவச காலை உணவு மற்றும் மதிய உணவுக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

உலகிற்கே முன்னோடியாக திகழும் தமிழ்நாடு - முதல்வரின் காலை சிற்றுண்டி திட்டத்தை பின்பற்றும் அமெரிக்கா !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தி.மு.க ஆட்சி அமையும் போதெல்லாம் நாட்டிற்கே வழிகாட்டும் ஆட்சியாக அவை இருக்கும். சமூக நீதி, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, அவர்களின் மேம்பாடு, தொழில் வளர்ச்சி, கல்வி உதவி என அடுக்கடுக்கான புதிய திட்டங்களை செயல்படுத்தி நாட்டிற்கே தமிழ்நாடு முன்னுதாரணமாக திகழும் வகையில் இருக்கும்.

அந்தவகையில் தற்போது இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளே திராவிட மாடல் வளர்ச்சியை பின்பற்றும் அளவிற்கு ஆட்சியை சிறப்பாக கொண்டுச் சென்றிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். குறிப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் உலக நாடுகளுக்கு இடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதன்படி தங்களுடைய நாடுகளிலும் அத்தகைய திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர்.

உலகிற்கே முன்னோடியாக திகழும் தமிழ்நாடு - முதல்வரின் காலை சிற்றுண்டி திட்டத்தை பின்பற்றும் அமெரிக்கா !

நீதிக்கட்சி ஆட்சியில் ஒரு நூற்றாண்டுக்கு முன்பே, சென்னை மாநகரத்தில் மாநகராட்சிப் பள்ளிகளில் பயின்ற ஏழை மாணவர்களுக்கு பகல் உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார் அன்றைய மேயர் தியாகராயர். அதன்பிறகு காமராசர் ஆட்சிக்காலத்தில் பகல் உணவுத் திட்டம் - மக்கள் நிதி உதவியோடு தொடங்கி, பிறகு அரசுத் திட்டமாகி, நல்ல பலன் தந்தது. பின்னர் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். ஆட்சியில் அது ‘சத்துணவு திட்டமாக’ வளர்ந்தது.

அதனைத் தொடர்ந்து தலைவர் கலைஞர் ஆட்சியில், மாணவர்களுக்கு வாரம் 2 முட்டை அல்லது வாழைப்பழங்கள் கூடுதலாகச் சேர்த்த அசல் சத்துணவாகவே பரிமளித்தது. பின்னர் அந்த திட்டம் தொடர்ந்து செயல்பட்டு வந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனை - வரலாற்றைப் பாராட்டியது. அந்த சாதனையை இன்றைய கல்விப் புரட்சி என்றே சொல்லலாம்.

உலகிற்கே முன்னோடியாக திகழும் தமிழ்நாடு - முதல்வரின் காலை சிற்றுண்டி திட்டத்தை பின்பற்றும் அமெரிக்கா !

குறிப்பாக, அரசு தொடக்கப்பள்ளிகளில் ஒன்றாம் வகுப்புமுதல் 5ம் வகுப்பு வரை சிற்றுண்டி சாப்பிட வசதியில்லாததாலோ வாய்பில்லாததாலோ வேறு காரணங்களாலோ பசியோடு வகுப்பறைகளுக்குச் சென்று, பாடங்களில் கவனம் செலுத்த இயலாத சூழல் இருந்து வந்தது.

‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதலமைச்சர், இதனைச் சரியாக உணர்ந்து ஆரம்பப் பள்ளிகளில் - நல்ல சுகாதாரமான காலைச் சிற்றுண்டியை அக்குழந்தைகளுக்கு அளிக்கும் திட்டத்தை 15.9.2022 அன்று தொடங்கி வைத்து, ‘திராவிட மாடல்’ ஆட்சியின் மணிமகுடத்தில் மேலும் ஓர் ஒளிமுத்தைப் பதித்துள்ளார்.

உலகிற்கே முன்னோடியாக திகழும் தமிழ்நாடு - முதல்வரின் காலை சிற்றுண்டி திட்டத்தை பின்பற்றும் அமெரிக்கா !

ஒரு மாணவருக்கு 12.75 ரூபாய் கூடுதல் செலவு என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதை நமது முதலமைச்சர் ‘செலவு’ அல்ல; அது எதிர்காலத்திற்கான ‘சமூக முதலீடு’ (சோஷியல் இன்ஸ்வெஸ்ட்மெண்ட்) என்று பொருத்தமாகக் குறிப்பிட்டுள்ளார். பிள்ளைகள் சில வீடுகளில் சிற்றுண்டி தயாராக இருக்கும்போது, காலதாமதம் என்று சாப்பிடாமல் பள்ளிக்கு அவசர அவசரமாக புறப்பட்டுச் செல்லும் நிலையில், அவர்களின் வயிற்றுப் பசி தீர்த்து, கல்வி அறிவுப் பசி போக்கும் அரும்பணி மலர்ந்துள்ளது.

உலகிற்கே முன்னோடியாக திகழும் தமிழ்நாடு - முதல்வரின் காலை சிற்றுண்டி திட்டத்தை பின்பற்றும் அமெரிக்கா !

இந்த சாதனைத் திட்டத்தை உலக நாடுகள் பின்பற்றி வருகின்றனர். குறிப்பாக ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றான மினசோட்டாவில் பள்ளி மாணவர்களுக்கு உணவு அளிக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்காவின் மினசோட்டா கவர்னர் டிம் வால்ஸ் மாநிலத்தில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும், அவர்களுக்கு இலவச காலை உணவு மற்றும் மதிய உணவுக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டத்தில் கையெழுத்திட்டுள்ளார். இதனால் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் பயனடைவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories