உலகம்

18 ஆண்டுகளாக விமான நிலையத்திலேயே வாழ்ந்த பிரபலம்.. வினோத மனிதருக்கு இறுதியில் நடந்த சோகம் !

பாரிஸ் விமான நிலையத்தில் 18 ஆண்டுகள் வாழ்ந்த மெஹ்ரான் கரிமி நஸ்செரி என்பவர் மாரடைப்பு காரணமாக தற்போது உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

18 ஆண்டுகளாக விமான நிலையத்திலேயே வாழ்ந்த பிரபலம்.. வினோத மனிதருக்கு இறுதியில் நடந்த சோகம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் அமைந்துள்ள சார்லஸ் டி கோல் விமான நிலையம் உலகப்புகழ் பெற்றது. இந்த விமான நிலையத்தில் 18 ஆண்டுகள் வாழ்ந்த மெஹ்ரான் கரிமி நஸ்செரி என்பவர் மாரடைப்பு காரணமாக தற்போது உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் நாட்டை சேர்ந்த மெஹ்ரான் கரிமி நஸ்செரி கடந்த 1974 ஆம் ஆண்டு, இங்கிலாந்தில் படிப்பதற்காக ஈரானை விட்டு வெளியேறியுள்ளார். அதன்பின்னர் அவர் மீண்டும் தாய் நாடு திரும்பிய நிலையில், ஆட்சிக்கு எதிராக போராடிய காரணத்தால் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

18 ஆண்டுகளாக விமான நிலையத்திலேயே வாழ்ந்த பிரபலம்.. வினோத மனிதருக்கு இறுதியில் நடந்த சோகம் !

தொடர்ந்து பிரான்ஸ் வழியாக இங்கிலாந்து செல்ல முயன்ற இவரை குடியுரிமை அதிகாரிகள் கைது செய்தனர். அப்போது அவர்கள் இவரிடம் நடத்திய விசாரணையில் தனது அகதி சான்றிதழ் அடங்கிய அவரது சூட்கேஸ் பாரிஸ் ரயில் நிலையத்தில் திருடப்பட்டதாகக் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து பிரான்ஸ் அதிகாரிகள் இவரைக் கைது செய்தனர்.

ஆனால், இவரிடம் பிற நாட்டுக்கு சொந்தமானவர் என்பதற்கான ஆவணம் ஏதும் இல்லாத காரணத்தால் இவரை சொந்தநாட்டுக்கு நாடுகடத்த இயலவில்லை. இதனால் கைது செய்யப்பட்டாலும் தொடர்ந்து பாரிஸ் விமனநிலையத்திலேயே தங்கி வந்தார். இவர் தொடர்பாக அரசு எந்த முடிவும் எடுக்காத நிலையில் அதிகாரிகளால் இவரை விமான நிலையத்தை விட்டு வெளியேற்ற இயலவில்லை.

18 ஆண்டுகளாக விமான நிலையத்திலேயே வாழ்ந்த பிரபலம்.. வினோத மனிதருக்கு இறுதியில் நடந்த சோகம் !

பின்னர் அங்குள்ள சிறிய வேலைகளை செய்து விமான நிலையத்தை தனது வாழ்விடமாகவே மாற்றிக்கொண்டார். இடையில் இவருக்கு அகதிகளுக்கான ஆவணங்கள் வழங்கப்பட்ட நிலையில் கூட ஆவணத்தில் கையெழுத்திட மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் வேறு வழியின்று இவர் விமானநிலையத்தில் தொடர்ந்து வாழ்ந்து வந்துள்ளார்.

இதன் காரணமாக இவர் அங்கு வந்த பயணிகளிடையே பிரபலமாகியுள்ளார். இவருக்கு 'லார்ட் ஆல்ஃபிரட்' என்று செல்லப்பெயரும் சூட்டப்பட்டது. இதனிடையே கடந்த 2006ம் ஆண்டு இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் இவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் பாரிஸிலேயே வசித்துவந்த இவர் தனது இறுதி நாட்களில் மீண்டும் விமான நிலையத்தில் குடியேறியுள்ளார்.

18 ஆண்டுகளாக விமான நிலையத்திலேயே வாழ்ந்த பிரபலம்.. வினோத மனிதருக்கு இறுதியில் நடந்த சோகம் !

இந்த நிலையில், விமான நிலையத்தில் 18 ஆண்டுகள் வாழ்ந்த இவர் தற்போது மாரடைப்பு காரணமாக தனது 77வது வயதில் உயிரிழந்துள்ளார். இவரின் இந்த வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட பிரெஞ்சு திரைப்படமான “லாஸ்ட் இன் டிரான்சிட்” 1993 ஆம் ஆண்டு வெளியானது. மேலும், இவரை மையப்படுத்தி டாம் ஹாங்க்ஸ் நடித்து ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் “தி டெர்மினல்” 2004 ம் ஆண்டு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories