உலகம்

விடுதி, நீச்சல்குளத்தோடு விற்பனைக்கு வந்த ஸ்பெயின் கிராமம் : இவ்வளவுதான் விலையா?

ஸ்பெயினில் கைவிடப்பட்ட கிராமம் ஒன்று விற்பனைக்கு வந்துள்ள சம்பளம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விடுதி, நீச்சல்குளத்தோடு விற்பனைக்கு வந்த ஸ்பெயின் கிராமம் : இவ்வளவுதான் விலையா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

வீடு விற்பனைக்கு, நிலம் விற்பனைக்கு போன்றவற்றை நாம் அடிக்கடி பாத்திருப்போம். சில நேரம் சில நிறுவனங்கள். தொழிற்சாலைகள் கூட விற்பனைக்கு வரும். ஆனால் இதற்கு முன் இல்லாத வகையில் தற்போது ஒரே கிராமமே விற்பனைக்கு வந்துள்ளது.

ஐரோப்பிய நாடான ஸ்பெயினுக்கும் போர்ச்சுக்கல் நாட்டுக்கும் இடையே சால்டோ டி காஸ்ட்ரோ என்னும் கிராமம் அமைந்துள்ளது. ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டிலிருந்து 3 மணி நேர பயண தூரத்தில் இந்த கிராமம் அமைந்துள்ளது.

விடுதி, நீச்சல்குளத்தோடு விற்பனைக்கு வந்த ஸ்பெயின் கிராமம் : இவ்வளவுதான் விலையா?

1950-களில் மின் தயாரிப்பு நிறுவனம் ஒன்று இந்த கிராமம் அமைந்துள்ள மலை பகுதியில் அணைக்கட்டு பணியை செய்து வந்தது. இதற்காக ஆட்களை திரட்டிய அந்த நிறுவனம் அவர்கள் தொடர்ந்து தங்க அதே பகுதியில் சால்டோ டி காஸ்ட்ரோ என்ற பெயரில் கிராமம் ஒன்றை உருவாக்கியது.

இந்த கிராமத்தில் 44 வீடுகள் கட்டப்பட்ட நிலையில், அங்கு இருப்பவர்களின் வசதிக்காக ஒரு விடுதி, ஒரு தேவாலயம், ஒரு பள்ளி, ஒரு நீச்சல் குளம் ஆகியவற்றையும் அந்த நிறுவனம் அமைத்துள்ளது. அணைக்கட்டு அமைக்கும் பணி சுமார் 30 ஆண்டுகள் நடைபெற்ற நிலையில், அதுவரை அந்த கிராமத்தில் தொழிலாளர்கள் தங்கியிருந்து வேலைபார்த்து வந்தனர்.

விடுதி, நீச்சல்குளத்தோடு விற்பனைக்கு வந்த ஸ்பெயின் கிராமம் : இவ்வளவுதான் விலையா?

பின்னர் அணைக்கட்டு வேலை முடிந்த நிலையில், கிராமத்தில் தங்கியிருந்தவர்கள் சொந்தவூர் திரும்பினர். இதனால் அந்த கிராமமே கைவிடப்பட்டது. நெடுநாள் யாரும் வசிக்காமல் இருந்த அந்த கிராமத்தை சுற்றுலாத்தளமாக மாற்றும் நோக்கில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஒருவர் விலை கொடுத்து வாங்கினார்.

ஆனால் பொருளாதார நெருக்கடி காரணமாக அவரால் கிராமத்தை சுற்றுலா தளமாக மாற்றமுடியவில்லை. இந்த நிலையில், தற்போது அந்த கிராமத்தை அவர் விற்பனை செய்ய முடிவெடுத்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த கிராமத்தை வாங்க 300-க்கும் மேற்பட்டோர் முன்வந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த கிராமத்தை குறைந்தபட்சம் ரூ.2.1 கோடிக்கு விற்பனை செய்யவுள்ளதாக அதன் தற்போதைய உரிமையாளர் அறிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories