உலகம்

உயிரோடு புதைக்கப்பட்ட பெண்.. குழியில் இருந்து போலிஸாருக்கு சென்ற கால்.. உயிரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்!

உயிரோடு புதைக்கப்பட்ட பெண் தனது கையில் இருந்த ஆப்பிள் வாட்ச் மூலம் போலிஸாருக்கு தகவல் அளித்து அவர் காப்பாற்றப்பட்டது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

உயிரோடு புதைக்கப்பட்ட பெண்.. குழியில் இருந்து போலிஸாருக்கு சென்ற கால்.. உயிரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

டிஜிட்டல் யுகத்தில் பல்வேறு கண்டுபிடிப்புகள் உலகளவில் அறிமுகமாகிவருகிறது. அந்த வகையில் மெசேஜ்கள், நோட்டிபிகேஷன், தொலைபேசி அழைப்புகள் போன்றவற்றை உள்ளடக்கிய ஸ்மார்ட்வாட்ச் பொதுமக்கள் மத்தியில் பல்வேறு வரவேற்பை பெற்றுவருகிறது. அதேநேரம் ஸ்மார்ட்வாட்ச் தற்போது ஒரு பெண்ணின் உயிரையும் காப்பாற்றியுள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டனில் வசிக்கும் 42 வயதான யங் சூக் அன் என்ற பெண் ஒருவர் தனது கணவரோடு சண்டையிட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அவரது கணவர் அந்த பெண்ணை கத்தியால் குத்தி மனைவி மயக்கமடைந்த நிலையில், அவரை குழிதோண்டி புதைத்துள்ளார்.

உயிரோடு புதைக்கப்பட்ட பெண்.. குழியில் இருந்து போலிஸாருக்கு சென்ற கால்.. உயிரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்!

அதைத் தொடர்ந்து குழியில் போட்டுப் புதைத்து விட்டதாகக் கையில் கட்டிருந்த ஆப்பிள் வாட்ச் மூலம் அவசர எண்ணிற்கு கால் செய்து தகவல் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் அவர் இருக்கும் இடத்திற்கு விரைந்துள்ளனர். ஆனால் அதற்குள்ளேயே அந்த பெண் தானாகவே கட்டை அவிழ்த்து குழியிலிருந்து போராடி வெளியில் வந்துள்ளார்.

படுகாயமடைந்த நிலையில் அந்த பெண்ணை மீட்ட போலிஸார் அவரை மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். அந்த வாட்சை அந்த பெண்ணின் கணவர் சம்மட்டியால் அடித்தும் அது உடையாமல் தக்க நேரத்தில் அந்த பெண்ணின் உயிரை காத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories