விளையாட்டு

"நடுவர் செய்தது தவறு,, அதை செய்து இருக்கக்கூடாது"-தோல்வியால் அழுதுபுலம்பும் பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள்!

இறுதிஓவரில் வீசப்பட்ட நோ பால் குறித்து நடுவர்கள் ஆலோசனை செய்த பிறகு, அதனை மூன்றாம் நடுவருக்கு அனுப்பி பார்க்க சொல்லி இருக்க வேண்டும் என முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் கூறி வருகின்றனர்.

"நடுவர் செய்தது தவறு,, அதை செய்து இருக்கக்கூடாது"-தோல்வியால் அழுதுபுலம்பும் பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி தனது முதல் போட்டியை பாகிஸ்தான் அணியுடன் மோதியது.இதில் டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.அதன் படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 159 ரன்களை எடுத்து 160 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. பின்னர் இந்திய அணி சார்பில் களமிறங்கிய முன்னணி பேட்ஸ்மேன்கள் கேப்டன் ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ், அக்சர் பட்டேல் ஆகியோர் மிகவும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

பின்னர் ஜோடி சேர்ந்த கோலி, பாண்டியா ஆகியோர் பாகிஸ்தான் பந்துவீச்சை சிதறடித்து இறுதி ஓவரில் 16 ரன்கள் தேவை என்ற நிலைக்கு கொண்டுவந்தனர். இறுதி ஓவரின் 4-வது பந்தை பந்துவீச்சாளர் கோலியின் இடுப்பு உயரத்துக்கு வீச அதை சிக்ஸருக்கு விளாசினார் கோலி . இடுப்பு உயரத்துக்கு வந்ததால் அந்த பந்தை நடுவர் நோ பால் என அறிவிக்க அடுத்த பந்து வைட் ஆக, தொடர்ந்து வந்த ப்ரீ ஹிட் பந்து ஸ்டம்பை தாக்க அதன் மூலம் 3 ரன்கள் எடுத்தார் கோலி. இப்படி இறுதிக்கட்ட பரபரப்புக்கு நடுவே இந்திய அணி அந்த பரபரப்பான போட்டியில் அபார வெற்றிபெற்றது.

"நடுவர் செய்தது தவறு,, அதை செய்து இருக்கக்கூடாது"-தோல்வியால் அழுதுபுலம்பும் பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள்!

அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் ரசிகர்கள் அந்த பந்து நோ பால் இல்லை என்றும் நடுவர் இந்தியாவுக்கு சாதகமாக நடந்துகொண்டார் எனவும் விமர்சித்து வருகின்றனர். மேலும் பாகிஸ்தான் முன்னாள் வீரர்களும் இந்த போட்டி குறித்து நடுவர்களை விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இது தொடர்பாக பேசியுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வசீம் அக்ரம், "நவாஸ் வீசிய பந்தின் உயரம் குறைந்து தான் வந்தது. வெறும் கண்களால் அந்த பந்தை பார்க்கும் போது நோ பாலாக தெரியவில்லை. ஆனால் ஸ்லோ மோஷனில் பார்க்கும் போது பந்தின் உயரம் குறைந்தது போல் தெரிந்தது. அதேநேரம் எந்த பேட்ஸ்மேனாக இருந்தாலும் நடுவரிடம் நோ பால் என முறையிடுவார். இதில் கோலி மீது எந்த தவறும் இல்லை. ஆனால் இது போன்ற பெரிய போட்டியில் நடுவர்கள் தொழில்நுட்பத்தை தான் பயன்படுத்தி இருக்க வேண்டும். அதனை செய்யாமல் பிரச்சினையை ஏன் உண்டாக்குகிறீர்கள்" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

"நடுவர் செய்தது தவறு,, அதை செய்து இருக்கக்கூடாது"-தோல்வியால் அழுதுபுலம்பும் பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள்!

இதேபோல பாகிஸ்தான் அணியின் முன்னாள் நட்சத்திர பந்துவீச்சாளர் வக்கார் யூனிஸ் கூறுகையில், " அந்த பந்து நோ பாலா இல்லையா என்று நடுவர் தான் அறிவிப்பார். ஆனால் இம்முறை விராட் கோலி கேட்ட பிறகு நடுவர் , ரீப்ளேவை பெரிய ஸ்கிரினில் பார்த்த பிறகுதான் அதனை நோ பால் என அறிவித்தார். நான் அது நோ பாலா இல்லையா என்ற சர்ச்சைக்குள் போக விரும்பவில்லை. ஆனால் நடுவர்கள் ஆலோசனை செய்த பிறகு, அதனை மூன்றாம் நடுவருக்கு அனுப்பி பார்க்க சொல்லி இருக்க வேண்டும். அதனை செய்யாதது பெரிய தவறு"என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories