உலகம்

முதலையை திருமணம் செய்த மேயர்! காரணத்தை கேட்டால் அதிர்ந்து விடுவீர்கள்!

மேயர் ஒருவர் பாரம்பரிய வழக்கத்தின்படி முதலையை திருமணம் செய்த நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதலையை திருமணம் செய்த மேயர்! காரணத்தை கேட்டால் அதிர்ந்து விடுவீர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மெக்சிகோ நாட்டில் ஓவாசகா மாநிலத்தில் உள்ள சான் பெட்ரோ ஹுவாமேலூலா என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரின் மேயராக விக்டர் ஹூகோ சவோசா என்பவர் செயல்பட்டு வருகிறார்.

இவர் அந்நாட்டின் பழங்கால பாரம்பரிய வழக்கப்படி கடந்த வியாழக்கிழமை அன்று முதலை ஒன்றை திருமணம் செய்துள்ளார். இந்த திருமண விழாவானது அப்பகுதி மக்களால் பாரம்பரிய முறைப்படி மேள தாளத்துடன் கொண்டாடப்பட்டது.

முதலையை திருமணம் செய்த மேயர்! காரணத்தை கேட்டால் அதிர்ந்து விடுவீர்கள்!

உள்ளூர் மக்களால் சூழப்பட்டு மணமகனான மேயர் அழைத்துவரப்பட்ட நிலையில், அங்கு வெள்ளை நிற உடையில் அலங்காரம் செய்து வைக்கப்பட்டிருந்த முதலையை அவர் திருமணம் செய்துகொண்டார்.

முதலை மேயரை கடித்துவிடக்கூடாது என்பதற்காக அதன் வாய்கள் கட்டப்பட்ட நிலையில் மேயரிடம் கொடுக்கப்பட்டது. பின்னர் அதை முத்தமிட்ட மேயர் நடனமாடி முதலையை திருமணம் செய்துகொண்டார்.

முதலையை திருமணம் செய்த மேயர்! காரணத்தை கேட்டால் அதிர்ந்து விடுவீர்கள்!

இதேபோன்ற திருமணம் இயற்கை அன்னையின் அருளை பெறுவதற்காகக் காலம் காலமாக நடந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து பேசிய மேயர் விக்டர், " இந்த திருமணத்தின் மூலம் நாங்கள் இயற்கை அன்னையிடம் தேவையான மழை, தேவையான உணவு, நதியில் தேவையான மீன்கள் ஆகியவற்றை வழங்குமாறு கேட்டு கொண்டோம்" என கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories