விளையாட்டு

உலக சாதனை படைத்த பும்ரா.. பிராட்டின் ஓவரை நொறுக்கி தள்ளி லாராவின் சாதனையை தகர்த்தார்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் பும்ரா ஒரே ஓவரில் அதிக ரன்கள் குவித்து உலக சாதனை படைத்துள்ளார்.

உலக சாதனை படைத்த பும்ரா.. பிராட்டின் ஓவரை நொறுக்கி தள்ளி லாராவின் சாதனையை தகர்த்தார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி 416 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த போட்டியில் பந்த் 146 ரன்களும், ஜடேஜா 104 ரன் களும் குவித்தனர். ஆனால் இந்த போட்டியில் இவர்களை மீறி பும்ரா உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

இந்திய அணி 83-வது ஓவர் முடிவில், 9 விக்கெட் இழப்புக்கு 377ரன்கள் குவிந்திருந்தது. இதனால் அணி எப்படியும் விரைவில் ஆட்டமிழந்து விடும் என்ற எதிர்பார்ப்பில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் பிராட் பந்துவீச வந்தார்.

உலக சாதனை படைத்த பும்ரா.. பிராட்டின் ஓவரை நொறுக்கி தள்ளி லாராவின் சாதனையை தகர்த்தார்!

ஆனால் அங்கு இதற்கு முன்னர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நடக்காத நிகழ்வு ஒன்று நடந்தேறியது. முதல் பந்தை இந்திய வீரர் பும்ரா எல்லை கோட்டுக்கு விரட்ட, அடுத்த பந்தில் வைட் சென்ற பந்து எல்லை கோட்டுக்கு சென்றது. பின்னர் அடுத்த பந்து நோ பாலாக வீச அதை பும்ரா சிக்ஸர் விளாசினார்.

அதைத் தொடர்ந்து அடுத்த பந்துகளும் 4,4,6,4 என பும்ராவால் விளாசப்பட்டது. பின்னர் கடைசி பந்தில் 1 ரன்கள் குவித்தார், இதனால் இந்த ஓவரில் மட்டும் 35 ரன்கள் குவிக்கப்பட்டது. இதில் பும்ரா மட்டும் 29 ரன்கள் குவித்தார்.

இதன் மூலம் லாரா எடுத்த ஒரே ஓவரில் 28 ரன்கள் என்ற டெஸ்ட் உலக சாதனை பும்ராவால் உடைக்கப்பட்டுள்ளது. பின்னர் இந்திய அணி 416 ரன்களுக்கு அனைத்து ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நிலையில் இங்கிலாந்து அணி ஆடி வருகிறது. .

banner

Related Stories

Related Stories