மு.க.ஸ்டாலின்

“உங்கள் தூக்கத்தை கெடுத்த surgical strike” - பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!

அ.தி.மு.க.வின் அழுத்தமே ரூ.5 ஆயிரம் உரிமைத்தொகையாக வழங்கக் காரணம் என்ற எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

“உங்கள் தூக்கத்தை கெடுத்த surgical strike” - பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை தற்போது தமிழ்நாட்டில் கொடிக்கணக்கான மகளிர் பெற்று வருகின்றனர். ஆரம்பத்தில் இந்த திட்டத்தை விமர்சித்த பல்வேறு கட்சிகள் தற்போது இதனை பார்த்து வியந்து வருகிறது. அதோடு இந்த திட்டத்தை மற்ற மாநிலங்களும் முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு தங்கள் மாநிலங்களிலும் குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களும் இதனை பின்பற்றுகின்றன.

இந்த சூழலில் இந்த திட்டத்தை தேர்தல் காரணம் காட்டி முடக்க நினைத்த ஒன்றிய பாஜக அரசின் மூக்கை உடைக்கும் வகையில், கோடைகால தொகையாக சேர்த்து ரூ.5000 அண்மையில் அனைத்து மகளிர் வங்கி கணக்குகளிலும் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாட்டு மக்கள் வெகுவாக பாராட்டி வரும் நிலையில், வழக்கம்போல் இதற்கும் ஸ்டிக்கர் ஒட்ட பார்க்கிறது அதிமுக.

“உங்கள் தூக்கத்தை கெடுத்த surgical strike” - பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!

அதாவது ஆரம்பத்தில் இந்த திட்டத்தை நடைமுறைக்கு சாத்தியமே இல்லை என்று வீரப்பாக பேசிய பழனிசாமி, தற்போது வாயடைத்து போகும் அளவிற்கு இந்த திட்டம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில், அ.தி.மு.க.வின் அழுத்தமே ரூ.5 ஆயிரம் உரிமைத்தொகையாக வழங்கக் காரணம் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளதற்கு பல்வேறு எதிர்மறை கருத்துகள் வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

“உங்கள் தூக்கத்தை கெடுத்த surgical strike” - பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு :-

திராவிட மாடல் அரசின் 5 ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை: முதலில் கொச்சைப்படுத்தினார்கள்; அது 'பூமராங்' ஆனதால் தற்போது உரிமை கொண்டாடுகிறார்கள்!

அ.தி.மு.க.வின் அழுத்தமே நாம் 1.31 கோடி குடும்பத் தலைவிகளுக்கு 5 ஆயிரம் ரூபாயை உரிமைத்தொகையாக வழங்கக் காரணம் என்ற அரிய கண்டுபிடிப்பை உதிர்த்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர்.

பழனிசாமி அவர்களே, உங்கள் அழுத்தம் காரணமல்ல. "உங்கள் டெல்லி ஓனர்கள் தேர்தலைக் காரணம் காட்டி உரிமைத்தொகையைத் தடுத்து நிறுத்துவார்கள் என்ற சூழ்ச்சிதான் காரணம்!" இதனைத் தெளிவாக விளக்கித்தான் எனது சகோதரிகளின் கணக்கில் பணத்தை அட்வான்சாக வரவு வைத்திருக்கிறேன்.

“உங்கள் தூக்கத்தை கெடுத்த surgical strike” - பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!

பரவாயில்லை, நீங்கள் உரிமை கொண்டாடுகிறீர்கள் என்பதில் இருந்தே திராவிட மாடல் சத்தமில்லாமல் நடத்திய surgical strike உங்கள் உறக்கத்தைக் கெடுத்து, இப்படி புலம்பும் அளவுக்கு பெரிய HIT அடித்துள்ளது எனப் புரிந்துகொள்கிறேன்.

Copy, paste அரசியல் என்பது காலங்காலமாக அ.தி.மு.க.வின் வாடிக்கை என்பதைத் தமிழ்நாட்டில் அனைவரும் அறிவார்கள். அதனால், புதுசா ஏதாவது சொல்லுங்க!

விடியல் பயணம், புதுமைப்பெண், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என திராவிட மாடல் அரசின் மகளிருக்கான திட்டங்களை இல்லந்தோறும் எடுத்துக்கூற கழகத்தின் மகளிர் படை மாநிலம் முழுவதும் களமிறங்கிவிட்டது. எங்கள் திமுக WomenPowerEngine முன் உங்க டப்பா எஞ்சின் தாக்குப்பிடிக்காது!

banner

Related Stories

Related Stories