அரசியல்

முதல் நாளே 120 தொகுதிகள்... வீடு வீடாக பரப்புரை... களத்தில் இறங்கியது ஸ்டாலினின் மகளிர் படை!

கழகத்தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி வாக்குச்சாவடி வாரியாக ’ஸ்டாலினின் மகளிர் படை வீடு வீடாக பரப்புரை’ இன்று பிப்.23 முதல் தொடங்கியுள்ளது.

முதல் நாளே 120 தொகுதிகள்... வீடு வீடாக பரப்புரை... களத்தில் இறங்கியது ஸ்டாலினின் மகளிர் படை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியை உறுதி செய்யும் பொருட்டு கழகத்தலைவர் முதலமைச்சர் அவர்களது வழிகாட்டுதலில் வாக்குச்சாவடி வாரியாக ஸ்டாலினின் மகளிர் படை வீடு வீடான பரப்புரையை இன்று (23.02.2026) முதல் தொடங்கியுள்ளது.

முதல் நாளே 120 தொகுதிகள்... வீடு வீடாக பரப்புரை... களத்தில் இறங்கியது ஸ்டாலினின் மகளிர் படை!

திராவிட மாடல் அரசின் மகளிர் நலத்திட்டங்களான விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம், தோழி விடுதி உள்ளிட்ட திராவிட மாடல் அரசின் எண்ணற்ற நலத்திட்டங்களைப் பற்றி ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் மகளிரிடம், ஸ்டாலினின் மகளிர் படையை சேர்ந்தவர்கள் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.

முதல் நாளே 120 தொகுதிகள்... வீடு வீடாக பரப்புரை... களத்தில் இறங்கியது ஸ்டாலினின் மகளிர் படை!

மகளிர் உரிமைத் தொகையை முடக்க ஒன்றிய பாஜக அரசும், அதன் கூட்டணிக்கட்சியான அதிமுகவும் தீட்டிய சதியை முன்கூட்டியே அறிந்து முறியடித்து 1.31 கோடி குடும்பத் தலைவிகளுக்கும் மகளிர் உரிமைத் தொகை முன்பணம் ரூ.3000, கோடை கால சிறப்புத் தொகுப்பு ரூ 2000 என மொத்தம் ரூ.5000 வழங்கியதோடு, தொடர உள்ள திராவிட மாடல் அரசில் உரிமை தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் எனவும் அறிவித்துள்ளார் முதலமைச்சர் அவர்கள். இந்த செய்தி அனைத்து பெண்களிடமும் எடுத்துரைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெண்களை பயனாளிகளாக மட்டும் எண்ணாமல், தமிழ்நாட்டு வளர்ச்சியின் பங்குதாரர்கள் என முக்கியத்துவம் கொடுத்து செயலாற்றி வருகிறது திராவிட மாடல் அரசு என்பது மகளிருக்கு முதலமைச்சரின் செய்தியாக தெரிவிக்கப்படுகிறது.

முதல் நாளே 120 தொகுதிகள்... வீடு வீடாக பரப்புரை... களத்தில் இறங்கியது ஸ்டாலினின் மகளிர் படை!

வெல்லும் தமிழ்ப்பெண்கள் – வீடுவீடான பரப்புரையின் முதல் நாளான இன்று சுமார் 120 தொகுதிகளில் வீடு வீடாக சென்று பரப்புரை மேற்கொண்டனர் ஸ்டாலினின் மகளிர் படை உறுப்பினர்கள். அனைத்து தொகுதிகளிலும் பொது மக்கள் சிறப்பான வரவேற்பினை அளித்து வருகின்றனர். திராவிட மாடல் அரசு தொடர்ந்தால் தான் நாலத்திட்டங்களும் தொடரும் ஒன்றிய பாஜக வுன் அதன் அடிமை டப்பா கூட்டணியும் பெண்கள் நலத்திட்டங்களுக்கு எதிரானவை என்று தமிழ்நாட்டு பெண்கள் அனைவரும் அறிந்தே உள்ளனர்.

தமிழ்நாட்டு பெண்கள் முழுக்க முழுக்க திமுக பக்கமே உள்ளனர் என்பது வெல்லும் தமிழ்ப்பெண்கள் – வீடுவீடான பரப்புரைக்கு கிடைத்துள்ள மாபெரும் ஆதரவின் மூலம் மீண்டும் உறுதியாகி உள்ளது.

banner

Related Stories

Related Stories