தமிழ்நாடு

46 முதலீட்டுத் திட்டங்களுக்கு ஊக்கச்சலுகைகள்... அமைச்சரவை கூட்டத்தில் நடந்தது என்ன?

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது.

46 முதலீட்டுத் திட்டங்களுக்கு ஊக்கச்சலுகைகள்... அமைச்சரவை கூட்டத்தில் நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (பிப்.23) 24-வது அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் தொழில் முதலீடுகள் குறித்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பல்வேறு புதிய முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதன் விவரம் வருமாறு :-

தமிழ்நாட்டில் புதிதாக நிறுவப்படவுள்ள மற்றும் விரிவாக்கம் மேற்கொள்ளப்படவுள்ள 46 முதலீட்டுத் திட்டங்களுக்கு ஊக்கச்சலுகைகள் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டங்களுக்காக ரூ.31,592.39 கோடி முதலீடு மேற்கொள்ள உறுதியளிக்கப்பட்டுள்ளதுடன், 61,521 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ளன.

இத்திட்டங்கள், மாநிலம் முழுவதும் பரவலாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, நாமக்கல், பெரம்பலூர், தேனி, திண்டுக்கல், கரூர், திருப்பூர், சேலம், கோயம்புத்தூர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் அமைக்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

46 முதலீட்டுத் திட்டங்களுக்கு ஊக்கச்சலுகைகள்... அமைச்சரவை கூட்டத்தில் நடந்தது என்ன?

இம்முதலீடுகளில், Sakthi Aircraft Industry நிறுவனத்தின் பயிற்சி விமான உபபாகங்கள் இணைத்தல் மற்றும் பராமரிப்பு, NMB-Minebea நிறுவனத்தின் பல்வகை செயல்பாடுகளுக்கான செமிகண்டக்டர்கள் உற்பத்தி, Yield Engineering Systems நிறுவனத்தின் செமிகண்டக்டர் உற்பத்திக்கான சாதனங்கள் தயாரிப்பு, Dixon குழுமத்தின் மின்னணுவியல் சாதனங்கள் உற்பத்தி, SFO Technologies நிறுவனத்தின் மின்னணு உபபாகங்கள் உற்பத்தி, Vikram Solar நிறுவனத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மின்கலன் சேமிப்பு அமைப்பு (BESS) தொகுத்தல், Minerva Special Purpose Vehicle நிறுவனத்தின் கவச வாகன உற்பத்தி, Hikoki Power Tools நிறுவனத்தின் மின்ஆற்றல் கருவிகள் உற்பத்தி, Festo நிறுவனத்தின் தொழில்துறை தானியக்க சாதனங்கள் உற்பத்தி, Aequs குழுமத்தின் விமான எந்திரம் மற்றும் கியர்பாக்ஸ் உபபாகங்கள் உற்பத்தி, Schneider Electric குழுமத்தின் குளிரூட்டும் சாதனங்கள் உள்ளிட்ட உற்பத்தி, Bharat Biotech குழுமத்தின் உயிர் அறிவியல் தயாரிப்புகளுக்கான பூங்கா, Caterpillar Inc. குழுமத்தின் கட்டுமான எந்திரங்கள் & சாதனங்கள் உற்பத்தி, Boeing நிறுவனத்தின் மேம்பட்ட வான்வெளி ஆராய்ச்சி & மேம்ம்பாட்டு மையம், Saint Gobain நிறுவனத்தின் கண்ணாடி தயாரிப்புகள், உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் பல்வேறு துறைகளைச் சார்ந்த முதலீடுகளும் அடங்கும்.

banner

Related Stories

Related Stories