உலகம்

கர்ப்பிணி பெண்ணை வதைத்த சீன கம்பெனிக்கு அபராதம்... ஆஸ்திரேலிய கடற்கரையில் விசித்திர பிராணி! #5in1_World

வழக்கின் தீர்ப்பில் அந்த கம்பெனிக்கு 10 ஆயிரம் டாலர் அபராதம் விதித்தது அந்நாட்டு நீதிமன்றம்.

கர்ப்பிணி பெண்ணை வதைத்த சீன கம்பெனிக்கு அபராதம்... ஆஸ்திரேலிய கடற்கரையில் விசித்திர பிராணி! #5in1_World
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

1) இஸ்ரேலில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி

மத்திய இஸ்ரேலில் அமைந்துள்ள டெல் அவிவ் நகரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள டெல் நகரில் மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்தத் தாக்குதலில் 5 பேர் பலியாகினர். பலர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற போலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை சுட்டுக் கொன்றனர். மேலும் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

2) ஆஸ்திரேலிய கடற்கரையில் விசித்திர பிராணி!

ஆஸ்திரேலியா கடற்கரையில் அடையாளம் தெரியாத ‘ஏலியன்’ உயிரினம் கரை ஒதுங்கியுள்ளது. நான்கு கால்கள் மற்றும் ஊர்வன விலங்குகளின் மண்டையோடு கூடிய மர்மமான ‘ஏலியன்’ போன்ற உயிரினம் ஒன்று ஆஸ்திரேலியா கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது. அலெக்ஸ் டான் என்பவர் சில நாட்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தின் மரூச்சிடோர் கடற்கரையில் நடந்து செல்லும் போது பிரிஸ்பேனில் இருந்து வடக்கே 63 மைல் தொலைவில் சில விநோதமான எச்சங்களை பார்த்ததாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

3) கர்ப்பிணி பெண்ணை வதைத்த சீன கம்பெனிக்கு அபராதம்!

கர்ப்பிணி பெண்ணை அதிக வேலை வாங்கியதற்காகவும் வேலை விட்டு தூக்கியதற்காகவும் சீன கம்பெனிக்கு 10 ஆயிரம் டாலர் அபராதம் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2019-ல் சையோயி என்கிற கர்ப்பிணி வேலை பார்த்து வந்த கம்பெனியில் அவருக்கு நீண்ட நாட்களாக ஷிப்ட் மாற்றாமல் நைட் ஷிப்ட் போட்டுள்ளனர். அதனால் அவர் சோர்வுற்று ஒரு நாள் நைட் ஷிப்ட்டில் தூங்கியுள்ளார்.

அதற்காக அவரை பணி நீக்கம் செய்துள்ளது அந்த கம்பெனி. அதனையடுத்து அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கின் தீர்ப்பில் அந்த கம்பெனிக்கு 10 ஆயிரம் டாலர் அபராதம் விதித்தது அந்நாட்டு நீதிமன்றம்.

4) ரஷ்யாவில் இருந்து அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற உத்தரவு!

ரஷியாவில் இருக்கும் அமெரிக்கர்கள் உடனே அந்நாட்டில் இருந்து வெளியேற வேண்டும் என்று அமெரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. ரஷ்ய படைகள் உக்ரைனில் போரில் ஈடுபட்டு வரும் சூழலில் ரஷ்யாவில் இருக்கும் அமெரிக்க குடிமக்களை ரஷ்ய அதிகாரிகள் துண்புறுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது.

இதனால் ரஷ்யாவுக்கு அமெரிக்கா குடிமக்கள் பயணம் மேற்கொள்ள வேண்டாம். ரஷ்யாவில் இருக்கும் அமெரிக்கர்கள் தடுத்து நிறுத்தப்படலாம். எனவே அந்நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு உடனடியாக வெளியேற வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

5) இலங்கையில் 2 நாட்களுக்கு டீசல் இல்லை!

இலங்கையில் 2 நாட்களுக்கு டீசல் இல்லை என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 37,500 மெட்ரிக் டன் டீசலை தரையிறக்க முடியவில்லை என பெட்ரோலிய கூட்டமைப்பு தலைவர் சுமித் விஜேசிங்க கூறியுள்ளார்.

இலங்கையில் எரிபொருள் நிலையங்களில் டீசல் இல்லாததால் இரண்டு நாட்களுக்கு மக்கள் வரிசையில் நிற்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அரசு நாளுக்கு நாள் சிக்கன நடவடிக்கைகளை அமல்படுத்தி வருகிறது. இந்நிலையில் எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்க 10 மணிநேர மின்வெட்டு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories