
விஜய் தலைமையிலான தவெக தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போயுள்ளது. குறிப்பாக பெண்கள் பாதுகாப்பு பெருமளவு கேள்விக்குள்ளாகியுள்ளது. ஆங்காங்கே சிறுமிகள் முதல் வயதான பாட்டிகள் வரை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வரும் சம்பவம் ஒரு புறம் மக்களை உலுக்க, மற்றொரு பக்கம் கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதோடு ரீல்ஸ் ஆட்சியாகவே தற்போதைய ஆட்சி செயல்பட்டு வருகிறது. அத்துமீறி தவெக நிர்வாகிகள் பள்ளிக்குள் நுழைந்து மாணவர்களை தொந்தரவு செய்து, அதனை ரீல்ஸாக வெளியிட்டு வருகின்றனர். மேலும் முதலமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் என இது ரீல்ஸ் அரசாகவே இயங்கி வருகிறது.
சட்டம் ஒழுங்கை சரி செய்யாமல், மக்களுக்கான நலத்திட்டங்களில் கவனம் செலுத்தாமல், திமுக மீது விமர்சனம், பொய் குற்றச்சாட்டு, கைது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதும், குதிரை பேரம் மூலம் மற்ற கட்சியினரை தங்கள் கட்சிக்கு இழுப்பதிலும் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது இந்த அரசு.
இப்படியான சூழலில் அண்மையில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பள்ளிக்கு ஆய்வு என்ற பெயரில் மாணவர்களிடம் அவநம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் ந்டந்துகொண்டதோடு, அதனை ரீல்ஸாகவும் வெளியிட்டுள்ளது பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்களை பெற்று வருகிறது.

அதாவது, கடந்த 2 நாட்களுக்கு முன்பு விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலில் அரசு மேள்நிலைப்பள்ளியில் தனது ரீல்ஸ் டீமுடன் ஆய்வுக்கு சென்ற அமைச்சர் கீர்த்தனா, ஒரு வகுப்பறைக்குள் நுழைந்து மாணவர்களிடம் ஆங்கில வார்த்தைக்கு பொருள் கேட்க, மொத்த மாணவர்களும் பதிலளிக்கிறார்கள்.
இதனை சற்றும் எதிர்பாராத கீர்த்தனா, பிறகு முதல் வரிசை மாணவியிடம் “What Is Your Father?” என்று கேள்வியெழுப்ப, பயத்தில் அந்த குழந்தை தயங்கி நிற்கிறார்.
உடனே “பார்த்தீங்களா? Spoken இங்கிலீஸ் தெரியல” என்று கூறுகிறார் கீர்த்தனா. சுதாரித்துக் கொண்ட ஆசிரியர் அக்குழந்தையிடம் பயப்படாதே தைரியமா பேசு எனக் கூறிவிட்டு “What Is Your Father's Profession?" என்று கேட்டவுடன் தயங்காமல் அக்குழந்தை பதிலளிக்கிறது.

எனினும் அந்த இடத்தில தனது அதிகாரத்தை நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காகவே “இதெல்லாம் சரிங்க இதே Back Bench-ல் இருப்பவர்களிடம் கேட்டிருந்தால் ஒருவருக்கு கூட பதில் தெரிந்திருக்காது” என்று ஆசிரியர்களுக்கு திமிராக பேசினார். இவ்வாறு பேசியதோடு மட்டுமில்லாமல், அதனை தனது சமூக வலைதள பக்கத்தில், அந்த குழந்தையின் முகத்தை கூட மறைக்காமல் அப்படியே வெளியிட்டுள்ளார் அமைச்சர் கீர்த்தனா.
அந்த காணொளியை சமூக வலைதளங்களில் பதிவு செய்ததன் மூலம் அக்குழந்தைகளின் கண்ணியத்தை பொதுவெளியில் சீர்குலைத்துள்ளார். இது அக்குழந்தைகளின் பெற்றோரையும் சங்கடப்பட வைத்திருக்கும். ஆனால் இதெல்லாம் நடந்தால் தனக்கு என்ன, தனக்கு பிரபலம் தான் முக்கியம் என்ற நோக்கில் இதனை வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் கீர்த்தனாவின் இந்த இழி செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு :-
அரசுப்பள்ளியில் ஆங்கிலப் புலமையை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் ‘ரீல்ஸ் அமைச்சர்’ ஒருவர் பிஞ்சுக் குழந்தையிடம் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியும் அருவருப்பும் அளிக்கிறது. It is grossly insensitive.
மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எந்தச் சூழ்நிலைகளில் கேமராக்களைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சருக்குத்தான் முதலில் Class எடுக்க வேண்டும்.
நம் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவது தான் நமது வேலை. மாறாக, அவர்களின் தன்னம்பிக்கையை உடைப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
உங்கள் விளம்பர வெறியை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். ரீல்ஸ் மோகத்துக்குப் பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்.






