உலகம்

"கொரோனாவில் இருந்து மீண்டவர்களையே ஒமிக்ரான் அதிகம் தாக்கும்": விஞ்ஞானிகள் கூறுவது என்ன?

கொரோனாவில் இருந்து மீண்டவர்களையே ஒமிக்ரான் அதிகம் தாக்கும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

"கொரோனாவில் இருந்து மீண்டவர்களையே ஒமிக்ரான் அதிகம் தாக்கும்":  விஞ்ஞானிகள் கூறுவது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தென் ஆப்ரிக்காவில் உருமாறிய கொரோனா ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது உலக நாடுகளை மீண்டும் அச்சப்பட வைத்துள்ளது. தற்போது இந்த புதிய வைரஸ் தென் ஆப்ரிக்கா, ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் உலக நாடுகள் முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் பரவாமல் தடுக்க கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஒமிக்ரான் வைரஸ் பாதித்து இது வரை யாரும் உயிரிழக்கவில்லை.

அதேசமயம் சமயம், ஒமிக்ரான் வைரஸ் குறித்து வெளியாகியுள்ள முதற்கட்ட ஆய்வில், 50 பிறழ்வுகளைக் கொண்டிருக்கும் இந்த வைரஸ் மிக வேகமாகப் பரவக்கூடியது. மேலும் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களை எளிதில் தாக்கும் வாய்ப்பு இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களை அதிகம் ஒமிக்ரான் வைரஸ் அதிகம் தாக்காது என கூறப்படுகிறது. அதேபோல் ஒமிக்ரான் வைரஸ் தொற்றால் இந்தியாவில் இது வரை யாரும் பாதிக்கப்படவில்லை என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

புதிய கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் இருப்பதால் நாடு முழுவதும் டிசம்பர் 31ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய உள்துறை செயலாளர் அஜய் பல்லா தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories