இந்தியா

“ஒமிக்ரான் வைரஸ் ஏற்கனவே இந்தியாவுக்குள் வந்திருக்கும்” : அதிர்ச்சி கிளப்பிய நுண்ணுயிரியலாளர்!

ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவில் நுழைந்திருக்க வாய்ப்புகள் இருப்பதாக நுண் உயிரியலாளர் ககன்தீப் கங் தெரிவித்திருப்பது மக்களை மேலும் அச்சமடையச் செய்துள்ளது.

“ஒமிக்ரான் வைரஸ் ஏற்கனவே இந்தியாவுக்குள் வந்திருக்கும்” : அதிர்ச்சி கிளப்பிய நுண்ணுயிரியலாளர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சர்வதேச நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் புதிய வகையான ஒமிக்ரான் இந்தியாவில் நுழைந்திருக்க வாய்ப்புகள் இருப்பதாக நுண் உயிரியலாளர் ககன்தீப் கங் தெரிவித்திருப்பது மக்களை மேலும் அச்சமடையச் செய்துள்ளது.

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா வைரஸின் பாதிப்பால் சர்வதேச நாடுகளில் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் லட்சக்கணக்கில் உயிர்பலியும் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்திருந்த நிலையில், மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பத் தொடங்கி இருந்தனர். இந்தச் சூழலில் கொரோனா வைரஸ் மீண்டும் உருமாற்றம் அடைந்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருப்பது மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே இரண்டு முறை உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், தென் கிழக்கு ஆசிய நாடுகளில் தற்போது ஒமிக்ரான் (Omicron) என்கிற புதிய உருமாற்றம் அடைந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

இதனால், சர்வதேச நாடுகள் பலவும் தென் ஆப்பிரிக்கா, பிரேசில், இங்கிலாந்து, வங்கதேசம், மொரீஷியஸ், போட்ஸ்வானா, நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங், சீனா, இஸ்ரேல் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை இந்த உருமாற்றமடைந்த புதிய வைரஸ் கண்டறியப்படாத நிலையில், ஒன்றிய அரசு விமானப் பயணங்களுக்கு கட்டுப்பாடுகளை நாளை முதல் அறிவித்துள்ளது.

இந்நிலையில், நுண் உயிரியலாளர் ககன்தீப் கங், இந்தியாவில் இந்த உருமாற்றமடைந்த ஒமிக்ரான் வைரஸ் நுழைந்திருக்க வாய்ப்புகள் அதிகமிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், உடனடியாக நவீன மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்துவதன் மூலம் பாதிப்புகளைப் பெருமளவில் தடுக்க முடியும். எனவே உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

நுண் உயிரியலாளர் ககன்தீப் கங் தெரிவித்துள்ள கருத்தால், பொதுமக்கள் மீண்டும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories