இந்தியா

ஒமிக்ரான் பாதிப்பு: RTPCR சோதனை கட்டாயம்.. 7 நாள் தனிமை - நாளை முதல் அமலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள்!

ஒமிக்ரான் வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக, தென் கிழக்கு ஆசியா உள்ளிட்ட 12 நாடுகளிலிருந்து தமிழகம் வருகை தரும் விமான பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயம் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

ஒமிக்ரான் பாதிப்பு: RTPCR சோதனை கட்டாயம்.. 7 நாள் தனிமை - நாளை முதல் அமலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஒமிக்ரான் கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தலையொட்டி, இந்திய சுகாதாரத்துறை செயலர் தலைமையில் நாடு முழுவதும் உள்ள மருத்துவத்துறை செயலாளர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் நாடு முழுவதும் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி தென்கிழக்கு ஆசிய நாடுகளான தென் ஆப்பிரிக்கா, பிரேசில், இங்கிலாந்து, வங்கதேசம், மொரீஷியஸ், போட்ஸ்வானா, நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங், சீனா, இஸ்ரேல் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து இந்தியா வரக்கூடிய சர்வதேச விமான பயணிகளுக்கு விமான நிலைய வளாகத்திலேயே ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பரிசோதனை முடிவுகள் வரும்வரை விமான நிலைய வளாகத்திலேயே பயணிகளை தங்க வைக்க வேண்டும் எனவும் அதில் நெகட்டிவ் என பரிசோதனை முடிவில் வரும் பட்சத்தில் அதன் பின்னரே விமான பயணிகள் அவர்களது வீடுகளில் ஏழு நாட்கள் தனிமைப்படுத்துதல் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஏழாம் நாள் முடிவில் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை எடுக்கப்பட்டு அதில் நெகட்டிவ் வந்த பின்னரும் ஏழு நாட்கள் மருத்துவக் கண்காணிப்பில் என 14 நாட்கள் இருக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக ஒன்றிய சுகாதாரத்துறை செயலர் அறிவுறுத்தலின்படி இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வநாயகம் தமிழகத்தில் உள்ள சர்வதேச விமான நிலைய இயக்குனருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories