தமிழ்நாடு

5 ரூபாய் நாணயத்தை விழுங்கி உயிருக்கு போராடிய சிறுவன்: துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்!

7 வயது சிறுவன் 5 ரூபாய் நாணயத்தை விழுங்கி உயிருக்குப் போராடி மருத்துவமனைக்கு வந்த நிலையில் அரூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் துரிதமாக செயல்பட்டு நாணயத்தை அகற்றி சிறுவனை காப்பாற்றினர்.

5 ரூபாய் நாணயத்தை விழுங்கி உயிருக்கு போராடிய சிறுவன்: துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

7 வயது சிறுவன் 5 ரூபாய் நாணயத்தை விழுங்கி உயிருக்குப் போராடி மருத்துவமனைக்கு வந்த நிலையில் அரூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தூரிதமாக செயல்பட்டு நாணயத்தை அகற்றி சிறுவனை காப்பாற்றினர்.

தருமபுரி மாவட்டம், அரூர் வீரப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்த முனிவேல், ஜெயஸ்ரீ தம்பதியினருக்கு ஏழு வயதில் ரிஷ்வந்த் என்கிற மகன் உள்ளார்.

நேற்று சிறுவன் ரிஷ்வந்த், தனது தாய் ஜெயஸ்ரீ இடம் ஐந்து ரூபாய் வாங்கிக்கொண்டு தின்பண்டங்களை வாங்கச் சென்றுள்ளார். ஆனால் தொடர்ந்து மழை பெய்து வந்ததால், வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், 5 ரூபாய் நாணயத்தை எடுத்து வாயில் போட்டு எதிர்பாராத விதமாக விழுங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து தாய் ஜெயஸ்ரீயிடம், தான் நாணயத்தை விழுங்கியதாகக் கூறியுள்ளார்.

இதனையடுத்து தாய் ஜெயஸ்ரீ, உறவினர்கள் உதவியுடன், சிறுவனை அரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு மருத்துவர் அருண் தலைமையில் மருத்துவர்கள் குழந்தைக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்துள்ளனர். அப்போது தொண்டைக்குழியில் நாணயம் இருப்பதை கண்டறிந்தனர்.

இதனையடுத்து குழந்தைக்கு மயக்க மருந்து கொடுத்து லரிங்கோஸ்கோப் உதவியுடன், 5 நிமிடத்தில் குழந்தையின் தொண்டைக் குழியில் மாட்டியிருந்த நாணயத்தை, பாதுகாப்பாக வெளியே எடுத்தனர்.

மருத்துவமனைக்கு வந்த பத்து நிமிடத்தில் துரிதமாக அரசு மருத்துவர்கள் குழந்தைக்கு சிகிச்யைளித்ததால் குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டது. இதனால் குழந்தையின் பெற்றோர் மகிழ்ச்சியடைந்தனர்.

மேலும் ஐந்து ரூபாய் நாணயத்தை விழுங்கி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த பத்து நிமிடங்களில் பாதுகாப்பாக காரில் எடுத்து குழந்தையின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்களுக்கு அரூர் பகுதி மக்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories