உலகம்

“ரிக்‌ஷாவை பறிமுதல் செய்ததால் கதறி அழுத ஓட்டுநர் - உதவிக்கரம் நீட்டும் மக்கள்” : மனதை உலுக்கும் வீடியோ!

வங்கதேசத்தில் அதிகாரிகளால் தனது வாகனத்தை பறிகொடுத்த ரிக்‌ஷா ஓட்டுநருக்கு தற்போது உதவிக்கரங்கள் நீண்டுவருகின்றன.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

வங்கதேச தலைநகர் டாக்காவைச் சேர்ந்தவர் ஃபஸ்லூர் ரஹ்மான். இவர் டாக்கா பகுதியில், பேட்டரி ரிக்‌ஷா ஓட்டி வருகிறார். இந்நிலையில், டாக்காவில், மோட்டார் பொருத்தப்பட்ட அல்லது பேட்டரி மூலம் இயக்கப்படும் ரிக்‌ஷாக்கள் மற்றும் வேன்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன் ஒருபகுதியாக, டாக்கா மாவட்ட நிர்வாகம், மோட்டார் பொருத்தப்பட்ட அல்லது பேட்டரி மூலம் இயக்கப்படும் ரிக்‌ஷாக்களை பரிமுதல் செய்து வருகின்றனர். அந்த வகையில், கடந்த வாரம் ஃபஸ்லூர் ரஹ்மானின் ரிக்ஷா வாகனத்தை கடைவிதியில் பறிமுதல் செய்தனர்.

அப்போது தனது குடும்பம் இந்த வாகனத்தை நம்பியே இருப்பதாகவும், கடன் 80 ஆயிரம் ரூபாய் இருப்பதாகவும், வாழ்வாதாரத்திற்கு வேறு வழி இல்லை எனவும் கெஞ்சியுள்ளார். ஆனால், வாகனத்தை பறிமுதல் செய்ய வந்த அதிகாரிகள், அவரின் பேச்சை காதுகொடுத்துக் கேட்காமல் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

இந்தச் சம்பவத்தின் போது, வாகனம் பறிபோவதை பார்த்து கதறி அழுதார் ஃபஸ்லூர் ரஹ்மான். அப்போது, அங்கிருந்த ஒருவர் அவர் அழுவதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அந்த வீடியோ பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

கொரோனா ஊரடங்கு காலத்தில், மக்கள் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை சந்திக்கின்ற நேரத்தில் அரசு இதுபோன்று நடந்துகொண்டதற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும், ரிக்ஷா ஓட்டுநர் ரஹ்மானுக்கு உதவி செய்ய பலரும் முன்வந்துள்ளனர். குறிப்பாக, டாட்டாவில் பிரபல ஆன்லைன் மளிகை விநியோக சேவை நிறுவனமான ஸ்வாப்னோவும் ஃபஸ்லூருக்கு உதவ முன்வந்துள்ளனர். ஃபஸ்லூர் ரஹ்மான் அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

banner

Related Stories

Related Stories