தமிழ்நாடு

தலித் பெண் ஊராட்சித் தலைவரை தரையில் அமரவைத்த சாதி ஆதிக்க கொடுமை : ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்!

புவனகிரியில், தெற்கு திட்டை ஊராட்சிக் கூட்டத்தில், தலித் பெண் ஊராட்சித் தலைவர் ராஜேஸ்வரி என்பவரை, தரையில் அமரவைத்த கூட்டம் நடத்திய ஊராட்சி செயலாளர் சிந்துஜா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தலித் பெண் ஊராட்சித் தலைவரை தரையில் அமரவைத்த சாதி ஆதிக்க கொடுமை : ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

புவனகிரி அருகே பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் பெண் ஊராட்சித் தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆகியோரை தரையில் அமரவைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில், திருவள்ளூர் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண் ஊராட்சி மன்றத் தலைவர் அமிர்தம் அம்மாள் சுதந்திரத்தன்று தேசியக் கொடி ஏற்றவிடாமல் தடுத்த விவகாரம் பரபரப்பைக் கிளப்பியது. அப்போது, மாவட்ட ஆட்சியர் தலையிட்டு அந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வந்தார்.

மேலும், ஊராட்சி மன்றத் தலைவர் அமிர்தம் அம்மாள் தேசியக்கொடியை ஏற்ற வைத்தார். அதனைத் தொடர்ந்தே, கோவை மாவட்டம் ஜே.கிருஷ்ணாபுரம், ஊராட்சி மன்றத் தலைவரான சரிதாவை, அலுவலகத்தில் அமரவிடாமல் கொலை மிரட்டல் விடுப்பதாக அவர் அளித்த புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தலித் பெண் ஊராட்சித் தலைவரை தரையில் அமரவைத்த சாதி ஆதிக்க கொடுமை : ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்!

இந்நிலையில், தற்போது மீண்டும் தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஊராட்சித் தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆகியோரை அவர்களுக்கான இருக்கைகளில் அமரவிடாமல், சாதி ஆதிக்கச்சக்தியினர் தரையில் அமரவைத்துள்ள சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

கடலூர் மாவட்ட புவனகிரி அருகே உள்ள தெற்கு திட்டை ஊராட்சியில், ஊராட்சி மன்றம் தேர்தலில் போட்டியிட்ட ராஜேஸ்வரி சரவணகுமார் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் ஆறு பேர் கொண்ட இந்த ஊராட்சியில் ஒருவர் மட்டும் ஆதி திராவிட சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினராக இருந்துள்ளார்.

மற்ற ஐந்து பேரும் ஆதிக்க சாதியினர் என்பதால் ஆதி திராவிட சமூகத்தைச் சேர்ந்த பெண் ஊராட்சி மன்ற தலைவரை மதிக்காமல் அவரிடன் தீண்டாமையை கடைபிடித்துள்ளனர். கடந்த குடியரசு தினம் மற்றும் சுதந்திரதினத்தன்று தேசியக் கொடியை கூட ஏற்ற விடவில்லை என்றும் மாற்று சமூகத்தைச் சார்ந்த துணைத் தலைவர் மோகன்ராஜ் என்பவரே தேசியக் கொடியை ஏற்றியுள்ளார்.

தலித் பெண் ஊராட்சித் தலைவரை தரையில் அமரவைத்த சாதி ஆதிக்க கொடுமை : ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்!

இதற்கு ஊராட்சி மன்ற செயலாளர் சிந்துஜா துணை போயுள்ளார். இதுபோன்று சாதிய வன்மத்துடன் செயல்பட்டுவந்துள்ள ஊராட்சி மன்ற செயலாளர் சிந்துஜா, சமீபத்தில் நடந்த கூட்டத்தின் போது, தலித் ஊராட்சி மன்றத் தலைவரையும் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த ஒரு உறுப்பினரையும் அவர்களுக்கான இருக்கைகளில் அமரவிடாமல், அலுவலகத்திற்குள் தரையில் அமரவைத்துள்ளனர்.

மேலும், ஊராட்சி மன்றத் தலைவருக்கான நாற்காலியில், சாதி ஆதிக்க சமூகத்தைச் சார்ந்த துணைத்தலைவர் மோகன் ராஜ் அமர்ந்துள்ளார். மாற்று சமூகத்தைச் சார்ந்த 4 உறுப்பினர்களும் நாற்காலியில் அமர்ந்துள்ளனர். இந்த சம்பவத்தின் போது, தலித் ஊராட்சி மன்றத் தலைவரையும் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த ஒரு உறுப்பினர்கள் தரையில் அமர்ந்திருந்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரியின் கனவர் செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டியில், “புகைப்படம் குறித்து வெளியான தகவல் அனைத்தும் உண்மையே. கீழ் சாதி என கூறு தரையில் அமரவைக்கிறார்கள். ஊராட்சி மன்ற தலைவராக எனது மணைவி இருந்த போதும் கூட, தாழ்ந்த சாதி என்று தேசிய கொடியை கூட ஏற்ற விடாமல் மேல் சாதிக்காரர்கள் தடுத்து விட்டனர்.

தலித் பெண் ஊராட்சித் தலைவரை தரையில் அமரவைத்த சாதி ஆதிக்க கொடுமை : ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்!

இதைவிட கொடுமை, சாதி ஆதிக்கத்தைச் சார்ந்தவர்கள் எப்போது கூட்டம் நடந்தவேண்டும் என சொல்கிறாரோ அப்போதுதான் ஊராட்சி மன்றக் கூட்டத்தை நடத்த வேண்டும். இல்லையெனில் மிரட்டுவார்கள்.

குறிப்பாக, “இங்கு நடக்கும் சம்பவங்களை வெளியில் சொன்னால், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையில் மேல்சாதிக்காரர்கள் அதிகமாக இருப்பதால் தலைவர் பதவியில் இருந்து எடுத்து விடுவோம்” என்பார்கள்.

நாளுக்கு நாள் அவர்களின் மிரட்டள்களுக்கு கட்டுபட்டே எந்த ஊராட்சி மன்ற பணிகளை செய்ய முடியவில்லை. அவர்களை மீறி எந்த பணியும் செய்ய விடுவதில்லை. ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடமும், காவல்துறையினரிடம் புகார் செய்து உள்ளோம்” எனத் தெரிவித்தார்.

இந்த சம்பவம், இன்று பெரும் பிரச்சனையாக மாறியதை அடுத்து, ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரியை நாற்காலியில் அமரக்கூடாது என தரையில் அமர வைத்து கூட்டம் நடத்திய, ஊராட்சி செயலாளர் சிந்துஜாவை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், துணைத் தலைவர் மோகன்ராஜ் மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி தலையீட்டின் மூலம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் நேரில் சென்று விசாரணை மேற்கொள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories