இந்தியா

”தொப்பியும், பதக்கமும் கொடுத்தால் பிரதமர் மோடி எங்கும் செல்வார்” : மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!

பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.

”தொப்பியும், பதக்கமும் கொடுத்தால் பிரதமர் மோடி எங்கும் செல்வார்” : மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வன்முறை சம்பவம் தொடர்ந்து வருகிறது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி ஒரு முறை கூட மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவில்லை. இது குறித்து காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வருகிறது.

இந்தியாவில் இருக்கும் மணிப்பூருக்கு செல்ல பிரதமர் மோடிக்கு நேரம் இல்லை என பா.ஜ.கவினர் வெட்கமே இல்லாமல் பேசி வருகின்றனர். ஆனால் இதேநேரம் 42 உலக நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டு இருக்கிறார்.

தற்போது கூட பிரதமர் மோடி 8 நாட்களுக்கு 5 நாடுகள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இருக்கிகிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு கூட கானா சென்ற பிரதமருக்கு அந்த நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரதமருக்கு யாராவது ஒரு தொப்பியும், பதக்கமும் கொடுத்தால், அதை அணிந்து கொண்டு எங்கு வேண்டுமானாலும் செல்வார் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.

ஐதராபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே," பிரதமர் மோடி, உலகில் உள்ள 42 நாடுகளுக்கு சென்றுள்ளார், ஆனால் கலவரத்தால் பதிக்கப்பட்ட மணிப்பூருக்கு இதுவரை செல்லவில்லை. மணிப்பூரில் மக்கள் மடிந்துகொண்டிருப்பதாகக் கூறிய அவர், பிரதமருக்கு யாராவது ஒரு தொப்பியும், பதக்கமும் கொடுத்தால், அதை அணிந்து கொண்டு எங்கு வேண்டுமானாலும் செல்வார்.

மோடியின் வெளியுறவு கொள்கை தவறாக உள்ளதால், அனைத்து பகுதிகளிலும் நமக்கு எதிரிகள் உருவாகி விட்டனர் என்றும், ஒருபுறம் சீனா, மறுபுறம் பாகிஸ்தான் இருக்கும் நிலையில், நேபாளம் கூட நம்மிடம் இருந்து விலகி விட்டதாகவும் அண்டை நாடுகள் நம்மை விட்டு சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். பிரதமர் மோடியின் 11 ஆண்டுகால ஆட்சி, பொருளாதாரத்தை அழித்து விட்டதுடன், அரசியல் சாசனத்தையும் அழித்து விட்டார்கள்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories