உலகம்

‘ரஷ்யாவின் கொரோனா தடுப்பு மருந்து மருத்துவ நெறிமுறைகளை மீறிய கண்டுபிடிப்பு’ - மூத்த மருத்துவர் ராஜினாமா!

ரஷ்ய நாட்டின் மூத்த சுவாசக்குழாய் நிபுணர் ஸ்புட்னிக் வி மருந்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பணியிலிருந்து விலகியுள்ளார்.

‘ரஷ்யாவின் கொரோனா தடுப்பு மருந்து மருத்துவ நெறிமுறைகளை மீறிய கண்டுபிடிப்பு’ - மூத்த மருத்துவர் ராஜினாமா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

உலக அளவில் கொரோனா தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்து அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா இருந்தாலும் அந்நாட்டினுடைய கண்டுபிடிப்பு சர்வதேச அளவில் பல்வேறு ஆராய்ச்சியாளர்களுக்கும், மருத்துவர்களுக்கும் சந்தேகத்தை விளைவித்துள்ளது.

ரஷ்யா கொரோனா தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துவிட்டதாகவும், அதன் பெயர் ‘ஸ்புட்னிக் வி’ என்றும் அறிவித்தது. மேலும் அந்த கொரோனா தடுப்பு மருந்து அங்கீகரிக்கப்பட்டு தன் மகள்களில் ஒருவருக்கே செலுத்தி சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்தார்.

ரஷ்யாவின் அறிவிப்பு மேற்குலக நாடுகளுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசின் அழுத்தத்துக்கு உட்பட்டு இந்த கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளதாக மேற்குலக நாடுகள் விமர்சித்தன. மேலும் இவ்வளவு விரைவாக ஒரு மருந்தைக் கண்டுபிடிக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ரஷ்யாவின் முன்னணி சுவாச நிபுணரான மருத்துவர் அலெக்ஸாண்டர் சுச்சாலின், ‘ஸ்புட்னிக் வி’ என்ற இந்த தடுப்பு மருந்து மருத்துவ நெறிமுறைகளை மீறிய கண்டுபிடிப்பு எனக் கூறி ரஷ்ய சுகாதார அமைச்சகத்திலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.

பாதுகாப்பு விஷயங்களைக் கருத்தில் கொண்டு இந்த கொரோனா தடுப்பு மருந்தை அங்கீகரிப்பதை மருத்துவர் சுச்சாலின் தடுக்க முயன்றுள்ளார். அதில் அவர் தோல்வியடையவே அவர் தன் பணியை ராஜினாமா செய்துள்ளார். மேலும் இந்த மருந்து கண்டுபிடிப்பில் முன்னணியிலிருந்து ஆராய்ச்சிகளைச் செய்த மருத்துவர்கள் அலெக்ஸாண்டர் கிண்ட்ஸ்பெர்க் மற்றும் பேராசிரியர் செர்ஜி போர்ஸ்விச் ஆகிய இருவரையும் மீறி அவசர அவசரமாக இந்த தடுப்பு மருந்தைத் தயாரிப்புக்கு அனுப்பிவிட்டதாக விமர்சனம் செய்துள்ளார்.

banner

Related Stories

Related Stories