உலகம்

அழுத்தம் காரணமாக அவசர அறிவிப்பா? - ரஷ்யாவின் கொரோனா தடுப்பு மருந்தை சந்தேகிக்கும் மேற்குலக நாடுகள்!

ஆராய்ச்சியாளர்கள் ஆட்சியாளர்களின் அழுத்தத்துக்கு ஆளாகி இருக்கலாம் என மேற்குலக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனாவுக்கு எதிரான மருந்தை அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா தன்னைத் தானே அறிவித்துக்கொண்டுள்ள நிலையில் அந்த கண்டுபிடிப்பு குறித்து மேற்குலக நாடுகள் சந்தேகம் கிளப்பியுள்ளன.

கொரோனா தடுப்பு மருந்தின் உற்பத்தி செப்டம்பர் மாதத்திலிருந்து தொடங்கும் என ரஷ்யா அறிவித்துள்ளது. மேலும் 20 நாடுகள் இந்த மருந்தை வாங்குவதற்கு முதற்கட்ட விண்ணப்பங்களை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளுடன் இணைந்து, ஐந்து நாடுகளில் ஒரு வருடத்துக்கு 500 மில்லியன் டோஸ் தடுப்பு மருந்துகளை ரஷ்யாவால் தயாரிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு விரைவாக ஒரு தடுப்பு மருந்தை கொரோனாவுக்கு கண்டறிய வாய்ப்பில்லை என்றும், ஆராய்ச்சியாளர்கள் மேலிட அழுத்தத்துக்கு ஆளாகி விரைவாக ஒரு மருந்தை கண்டுபிடிக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த கண்டுபிடிப்பைத் தொடங்கியிருக்கலாம் எனவும் மேற்குலக ஆராய்ச்சியாளர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

மேலும் இது சம்பந்தமாகக் கருத்து தெரிவித்துள்ள உலக சுகாதார நிறுவனம் கோவிட் 19 நோய்க்காகக் கண்டறியப்படும் எந்த ஒரு தடுப்பு மருந்தும் உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் வேண்டும் என்றால் கடுமையான சோதனைக்கு உள்ளாக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

ஆனால், ரஷ்யா குறிவைக்கப்பட்டு மேற்குலக ஊடகங்களால் தாக்கப்படுகின்றது எனவும், இந்த தருணத்தில் இதில் அரசியல் செய்வதை ஓரமாக வைத்துவிட்டு மகிழ்ச்சி அடையவேண்டும் எனவும் ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories