Corona Virus

“உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை பதிவு செய்தது ரஷ்யா” - அதிபர் மகளுக்கு நடைபெற்ற பரிசோதனை வெற்றி!

கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தை ரஷ்யா உருவாக்கியுள்ளதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தை ரஷ்யா உருவாக்கியுள்ளதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வரும் நிலையில், கொரோனாவுக்கு எதிராக தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்துகள் தயாரிக்கப்பட்டு மனிதர்களுக்கு பரிசோதிக்கும் இறுதிகட்ட நிலையில் உள்ளன.

இந்நிலையில், கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்து உருவாக்கி ஒழுங்குமுறை அனுமதியையையும் ரஷ்யா அரசு வழங்கியுள்ளதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார்.

“உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை பதிவு செய்தது ரஷ்யா” - அதிபர் மகளுக்கு நடைபெற்ற பரிசோதனை வெற்றி!

இதுதொடர்பாக அந்நாட்டு அமைச்சர்களிடையே இன்று காணொளிக் காட்சி வாயிலாகப் பேசிய அதிபர் புதின், “உலகில் முதன்முறையாக, கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டு இன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

கமேலியா ஆராய்ச்சி நிறுவனம் இந்த தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளது. இந்த மருந்து ரஷ்ய சுகாதாரத்துறை சார்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனது இரு மகள்களில் ஒருவர் இந்த தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்டார். தற்போது நலமாக உள்ளார். இந்த புதிய தடுப்பு மருந்து, கொரோனா வைரஸுக்கு எதிரான நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், ரஷ்யா தடுப்பு மருந்தை வெற்றிகரமாகச் சோதித்து, பதிவு செய்துள்ளது உலக மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories