உலகம்

நேபாளத்தைத் தொடர்ந்து இந்திய பகுதிகளை இணைத்து பாக். வெளியிட்ட புதிய வரைபடம் - வெளியுறவுத்துறை கண்டனம்!

இந்திய பகுதிகளான காஷ்மீர், லடாக் மற்றும் குஜராத்தின் சில பகுதிகளை இனைத்தும் புதிய வரைப்படத்தை பாகிஸ்தான் வெளியிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேபாளத்தைத் தொடர்ந்து இந்திய பகுதிகளை இணைத்து பாக். வெளியிட்ட புதிய வரைபடம் - வெளியுறவுத்துறை கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மத்தியில் ஆட்சி செய்யும் மோடி அரசு, ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்துக்கான 370வது சட்டப்பிரிவை நீக்கி ஓராண்டு ஆகிறது. இந்நிலையில், காஷ்மீர், லடாக் மற்றும் குஜராத்தின் சில பகுதிகளையும் இனைத்து பாகிஸ்தான் புதிய அரசியல் வரைப்படத்தை வெளியிட்டுள்ளது.

அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் வெளியிட்டுள்ள புதிய வரைப்படத்தில், காஷ்மீர், லடாக் மற்றும் குஜராத்தின் சில பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாகிஸ்தானில் செயல் அரசியல் அபத்தமானது என்றும் சர்வதேச அளவில், நம்பகத்தன்மையோ, சட்டப்படியான செல்லுபடியோ இல்லாதது என்றும் குறிப்பிட்டுள்ளது. இதுபோன்ற மோசமான நடவடிக்கையினால், இந்திய பகுதியை ஆக்கிரமிக்கும் பாகிஸ்தானின் பேரசை சர்வதேச அளவில் அம்பலமாகும் எனத் தெரிவித்துள்ளனர்.

நேபாளத்தைத் தொடர்ந்து இந்திய பகுதிகளை இணைத்து பாக். வெளியிட்ட புதிய வரைபடம் - வெளியுறவுத்துறை கண்டனம்!

அண்மையில் நேபாளம் வெளியிட்டுள்ள புதிய வரைபடத்தில் இந்திய பகுதிகளை சேர்த்தது பெரும் சர்ச்சையானது. நேபாளத்தின் பிரச்சனை ஓய்வதற்குள் பாகிஸ்தான் அடுத்த பிரச்சனையை ஈடுபடத் துவங்கியுள்ளது.

banner

Related Stories

Related Stories