உலகம்

''ஊரடங்கு உத்தரவை மீறி பிறந்தநாள் கொண்டாடிய பிரபல நடிகை கைது'' - ரூ. 20 ஆயிரம் அபராதம்! #Covid19

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறியதாக பிரபல நடிகை கைது செய்யப்பட்டுள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவிலும் கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுத்துள்ளது. அந்த நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான லாகோசில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனால் அந்த நகரில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதற்கும், திருமணம், இறுதிச் சடங்குகளில் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அந்த நாட்டின் பிரபல நடிகையான பன்கே அகிண்டெலே உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோரை வீட்டுக்கு வரவழைத்து தனது கணவரின் பிறந்தநாளை கோலகலமாகக் கொண்டாடினார். மேலும் அவர் மது, ஆடல், பாடல் என களைகட்டிய விருந்து நிகழ்ச்சியை வீடியோ பதிவு செய்து சமூகவலைதளத்தில் பதிவிட்டார். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

பிறந்தநாள் விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் பல நாட்களாக தனது வீட்டிலேயே தங்கியிருப்பதாகவும், யாரும் வெளியே இருந்து வரவில்லை என்றும் கூறி நடிகை பன்கே அகிண்டெலே தனது செயலை நியாயப்படுத்தினார். ஊரடங்கு உத்தரவை மீறியதாகக் கூறி அவரை போலிஸார் கைது செய்தனர். மேலும் அவருக்கு 260 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.20 ஆயிரம்) அபராதமும் விதித்தனர்.

banner

Related Stories

Related Stories