உலகம்

‘நமக்கு வேறு உலகம் இல்லை’ சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி உலகம் முழுவதும் பள்ளி மாணவர்கள் போராட்டம்!

‘நமக்கு வேறு உலகம் இல்லை’ என்ற முழக்கத்தை முன்வைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி உலகம் முழுவதும் பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

உலகம் முழுவதும் காடழிப்பு, இயற்கை வளங்கள் சுரண்டல், கடல் நீர் மட்டம் உயர்தல் போன்ற காரணத்தால் பருவநிலை மாற்றம் வேறு வடிவதற்கு மாறுகிறது.

இதனால் 2030-க்குள் கார்பன் வெளியேற்ற அளவை பூஜ்ஜியமாக குறைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி கிரெட்டா துன்பர்க் என்ற பள்ளி மாணவியின் போராட்டம் 110 நகரங்களில் பரவி பெரும் போராட்டமாக உருவெடுத்துள்ளது.

சுவிட்சர்லாந்த நாட்டைச் சேர்ந்தவர் 12 வயது சிறுமி கிரெட்டா துன்பர்க். பருவநிலை மாற்றத்திலிருந்து உலகை காக்க உலக தலைவர்கள் முன்வரவேண்டும் என்ற கோரிக்கையை பிரச்சாரம் மேற்கொண்டார்.

‘நமக்கு வேறு உலகம் இல்லை’ சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி  உலகம் முழுவதும் பள்ளி மாணவர்கள் போராட்டம்!

இந்த பிரச்சாரத்திற்கு ஆதராவாக பல நாடுகளைச் சேர்ந்த சூழலியல் ஆர்வலர்கள் இணைந்துள்ளனர். குறிப்பாக, இவரின் தலைமையில் பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட வரவேண்டும் என தனியார் தன்னார்வலர் அமைப்பு கோரிக்கை வைத்தது.

அதன் கோரிக்கையை ஏற்று பள்ளி மாணவர்கள் உட்பட பலரும் உலகம் முழுவதும் பருவநிலை மாற்றத்தின் போது அரசு தலையீட்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என நேற்றைய தினம் பேரணி நடைபெற்றது.

‘நமக்கு வேறு உலகம் இல்லை’ சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி  உலகம் முழுவதும் பள்ளி மாணவர்கள் போராட்டம்!

இந்த பேரணியில் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, இங்கிலாந்து ஆசிய பசிபிக் போன்ற நாடுகளில் பள்ளி மாணவர்கள் 'கடல் மட்டம் உயர்ந்து வருகிறது', ‘ நமக்கு வேறு உலகம் இல்லை’ என எழுதப்பட்ட பதாகைகளுடன் பேரணி சென்றனர்.

உலக நாடுகளில் மொத்தம் 110 நகரங்களில் பருவநிலை மாற்றத்துக்கு எதிரான இந்தப் பேரணியில் போராட்டக்காரர்கள் பங்கேற்றனர்.

இந்த போராட்டம் உலகம் முழுவதும் பரவி வருகிறது. மேலும் இந்த போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற சிறுமி கிரெட்டா துன்பர்க்குக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

banner

Related Stories

Related Stories