வைரல்

பயணிகளின் உணவை ருசி பார்த்த எலிகள் : இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ - ரயில்வே துறையின் அலட்சியம்!

ரயிலில் பயணிகளுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த உணவை எலிகள் ருசி பார்க்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பயணிகளின் உணவை ருசி பார்த்த எலிகள் : இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ - ரயில்வே துறையின் அலட்சியம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அக்டோபர் 15ம் தேதி மும்பை - கோவை எகஸ்பிரஸ் ரயிலில் பயணி ஒருவர் தனது குடும்பத்துடன் சென்றுள்ளார். அப்போது அவர் ரயில் என்ஜின் பகுதி எப்படி இருக்கும் என்பதைப் பார்ப்பதற்காகத் தனது பெட்டியிலிருந்து அடுத்தடுத்த பெட்டிகளை கடந்து சென்றுள்ளார்.

அப்போது ரயில் நடுவே பயணிகளுக்கு உணவு வழங்குவதற்கான சமையல் அறை பெட்டி இருந்துள்ளது. பின்னர் அதற்குள் சென்று அந்த பயணி பார்த்துள்ளார். அப்போது அங்கு 6க்கும் மேற்பட்ட எலிகள் ஜாலியாக சுற்றிக் கொண்டிருந்துள்ளது. மேலும் சில எலிகள் பயணிகள் வழங்குவதற்காகத் தயாரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த உணவை ருசி பார்த்துக் கொண்டிருந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் இந்த சம்பவத்தை வீடியோ எடுத்துள்ளார். மேலும் அங்கு இருந்த ஊழியரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் இந்த சமையல் அறைபெட்டிக்கு அடியில் 500க்கும் மேற்பட்ட எலிகள் இருக்கும். 6 எலிகள் இங்கு இருப்பதால் என்ன பிரச்சனை? என அலட்சியமாகப் பதில் அளித்துள்ளார்.

இந்த பதிலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பயண உணவுகளை எலிகள் சாப்பிடும் வீடியோவை தனது சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இது குறித்து ரயில்வே நிர்வாகத்திடமும் புகார் அளித்துள்ளார்.

அதோடு," பயணிகளிடம் தங்களது பாதுகாப்பைப் பற்றி கேவலமாக பேசத்தான் RPF-க்கு பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது?. எங்கள் பாதுகாப்பைக் கேள்வி கேட்க எங்களுக்கு உரிமை இல்லையா?" என ஒன்றிய அமைச்சர் அஷ்வின் வைஷ்ணவுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

banner

Related Stories

Related Stories